விளையாட்டு

பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனாவுக்கு அபராதம்

செய்திப்பிரிவு

துபாய்: மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்​கெட் தொடர் துபாயில் நடை​பெற்று வரு​கிறது. இதில் கடந்த 5-ம் தேதி நடைபெற்ற லீக் ஆட்​டத்​தில் இந்​திய அணி 7 விக்​கெட்​கள் வித்தியாசத்தில் பாகிஸ்​தானை வீழ்த்​தி​யிருந்​தது. இந்த ஆட்டத்தில் இந்​திய வீராங்​கனை ஷபாலி வர்​மா, பாகிஸ்தான் அணி​யின் கேப்​டன் பாத்திமா சனா வீசிய பந்​தில் ஆட்​ட​மிழந்​தார்.

அப்​போது பாத்​திமா சனா, ஷபாலி வர்​மாவை பெவிலியனை நோக்கி செல்​லு​மாறு சைகைகளை காட்​டி​னார். இது ஐசிசி நடத்தை விதி​முறை​களை மீறிய செய​லாகும். இதுதொடர்​பாக விசா​ரணை நடத்​திய ஐசிசி, பாத்​திமா சனா​வுக்கு போட்​டி​யின் ஊதி​யத்​தில் 10 சதவீதத்தை அபராத​மாக விதித்​துள்​ளது. மேலும் ஒரு தகு​தி​யிழப்பு புள்​ளியை​யும் வழங்​கி உள்​ளது.

SCROLL FOR NEXT