விளையாட்டு

“எங்களின் பேட்டிங் எங்களைக் கைவிட்டுவிட்டது” - லக்னோ கேப்டன் ரிஷப் பந்த் வருத்தம்

செய்திப்பிரிவு

லக்னோ: ராஜஸ்​தான் ராயஸ் அணிக்கு எதி​ரான ஆட்டத்தில் ஆடு​களத்​தின் தன்​மையை சரி​யாகக் கணிக்கத் தவறி​விட்​ட​தாக​வும் இதுவே தோல்விக்கு முக்கியக் காரண​மாக அமைந்​த​தாக லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணி​யின் கேப்​டன் ரிஷப் பந்த் கூறி​யுள்ளார்.

ஐபிஎல் தொடரில் நேற்று முன்​தினம் லக்​னோ​வில் உள்ள ஏகானா மைதானத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி​யிடம் 40 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி அடைந்​தது லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணி. இந்த ஆட்​டத்​தில் 160 ரன்​கள் இலக்கை துரத்​திய லக்னோ அணி 119 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது.

போட்​டிக்கு பின்​னர் லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்​டன் ரிஷப் பந்த் கூறிய​தாவது: எந்த இடத்தில் தோல்வி அடைந்​தோம் என்​ப​தற்​கான பதில்​கள் எனக்கு தெரிய​வில்​லை. எங்​களின் பேட்​டிங் எங்​களைக் கைவிட்​டு​விட்​டது. ஒரு அணி​யாக, ஒரு குழு​வாக நாங்​கள் மிக​வும் ஏமாற்​றமடைந்​துள்​ளோம். பதில்​களை வெளி​யில் தேடு​வதை விட, எங்​களுக்​குள்​ளேயே தான் தேட வேண்டும். பேட்​டிங் செய்​யும் போது நாங்​கள் இன்​னும் சிறிது நேரம் எடுத்து நிதான​மாக விளை​யாடி இருக்க வேண்​டும்.

தோல்விக்கு சாக்​குப்​போக்​கு​கள் சொல்ல விரும்​ப​வில்​லை. என்​னை​யும் சேர்த்​துச் சொல்​கிறேன், ஆட்​டத்தை நாங்​கள் கடைசி வரை கொண்டு சென்​றிருக்க வேண்​டும். ஒரு பேட்டிங் குழு​வாக, இந்​தத் தோல்விக்கு நாங்​கள் தான் பொறுப்​பேற்க வேண்​டும். பந்​து​வீச்சை பொறுத்​தவரையில் நேர்​மறை​யான விஷ​யங்​களைக் கவனிக்க வேண்டும். நாங்​கள் தலைகுனி​யாமல், எங்​களுக்​குள் விடை தேட வேண்​டும். தொடரின் போக்கை மாற்றி அமைக்​கும் திறன் எங்​களிடம் உள்​ளது. இவ்​வாறு ரிஷப்​ பந்த்​ கூறி​னார்​.

SCROLL FOR NEXT