ஓஸ்லோ: நார்வே செஸ் போட்டியின் 7-வது சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டர்கள் ஆர்.பிரக்ஞானந்தா, டி.குகேஷ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
நார்வேயின் ஓஸ்லோ நகரில் இந்த செஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா, பிரான்ஸின் அலிரேசா பிரோஸ்ஜாவை வீழ்த்தினார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் டி.குகேஷ், அமெரிக்காவின் வெஸ்லி சோவை தோற்கடித்தார்.
நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சன், ஜெர்மனியின் வின்சென்ட் கீமர் ஆகியோரிடையிலான ஆட்டத்தில் கார்ல்சன் வெற்றி பெற்றார். 7-வது சுற்றின் முடிவில் வெஸ்லி சோ 12.5 புள்ளிகளுடனும், அலிரேசா 10 புள்ளிகளுடனும், பிரக்ஞானந்தா, கார்ல்சன், வின்சென்ட் கீமர் ஆகியோர் தலா 9 புள்ளிகளுடனும், குகேஷ் 8 புள்ளிகளுடனும் உள்ளனர்.