விளையாட்டு

195 ரன்களுக்கு ஆட்டமிழந்தது வடக்கு மண்டலம்: துலீப் டிராபி

செய்திப்பிரிவு

பெங்களூரு: துலீப் டிராபி தொடரின் அரை இறுதி ஆட்​டத்​தில் தெற்கு மண்​டலம் - வடக்கு மண்​டலம் அணி​கள் இடையி​லான ஆட்டம் பெங்​களூரு​வில் நேற்று தொடங்​கியது. முதலில் பேட் செய்த வடக்கு மண்​டலம் அணி 59.1 ஓவர்​களில் 195 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது.

அதி​கபட்​ச​மாக தொடக்க வீர​ரான கம்​ரான் இக்​பால் 182 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 10 பவுண்​டரி​களு​டன் 76 ரன்​கள் விளாசி​னார். கேப்​டன் கன்​ஹையா வதவான் 35, ஆயுஷ் டோசேஜா 23, அப்​துல் சமத் 16, சனத் சங்க்​வான் 10, அர்​ஷ்தீப் சிங் 10 ரன்​கள் சேர்த்​தனர்.

தெற்கு மண்​டலம் அணி சார்​பில் வேகப்​பந்து வீச்​சாள​ரான வித்​வத் கவேரப்பா 4 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார். நிதேஷ், தனய் தியாக​ராஜன் ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை கைப்​பற்​றினர். இதையடுத்து விளை​யாடிய தெற்கு மண்​டலம் முதல் நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 18 ஓவர்​களில் 2 விக்​கெட்​கள் இழப்​புக்கு 40 ரன்​கள் எடுத்​தது.

ரிக்கி புயி 5, ஷேக் ரஷீத் 0 ரன்​களில் ஆட்​ட​மிழந்​தனர். நாராயணன் ஜெகதீசன் 58 பந்​துகளில், 6 பவுண்​டரி​களு​டன் 34 ரன்​களும், கேப்​டன் திலக் வர்மா ஒரு ரன்​னும் சேர்த்து களத்​தில் இருந்​தனர். கைவசம் 8 விக்​கெட்​கள் இருக்க 155 ரன்​கள் பின்​தங்​கி​யுள்ள தெற்கு மண்டல அணி இன்று 2-வது நாள் ஆட்​டத்தை தொடர்ந்து விளை​யாடு​கிறது.

மற்​றொரு அரை இறுதி ஆட்​டத்​தில் மத்​திய மண்​டலம் - கிழக்கு மண்​டலம் அணி​கள் மோதின. இதில் முதலில் பேட் செய்த மத்​திய மண்​டலம் அணி 80.1 ஓவர்​களில் 266 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக ரிங்கு சிங் 88 பந்​துகளில், 8 பவுண்​டரி​களு​டன் 60 ரன்​களும், ஆர்​யன் ஜூயல் 113 பந்​துகளில், 6 பவுண்​டரி​களு​டன் 46 ரன்​களும் எடுத்​தனர்.

யாஷ் ரத்​தோடு 27, ஹர்ஷ் துபே 27, அயன் பாண்டே 22, சரண்ஷ் ஜெயின் 13, கேப்​டன் ரஜத் பட்​டி​தார் 12, அமன் மோஹதே 8, குணால் சந்​தேலா 6, அர்​ஷ்த் கான் 1 ரன்​களில் நடையை கட்​டினர். யாஷ் தாக்​குர் 30 ரன்​கள் சேர்த்து ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தார்.

கிழக்கு மண்​டலம் அணி தரப்​பில் முகேஷ் குமார், அபிஜித் சர்க்​கார் ஆகியோர் தலா 3 விக்​கெட்​களை வீழ்த்​தினர். முகமது ஷமி, முகமது கவுனைன் குரேஷி ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை கைப்​பற்​றினர். 2-வது நாளான இன்று கிழக்கு மண்​டலம் அணி பேட்​டிங்கை தொடங்​கு​கிறது.

SCROLL FOR NEXT