விளையாட்டு

மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் நியூஸி. வெற்றி: சாண்ட்னரின் அதிரடியால் தொடரை 2-0 என கைப்பற்றியது

செய்திப்பிரிவு

நேப்பியர்: மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்கு எதி​ரான 2-வது ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டி​யில் 5 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது நியூஸிலாந்து அணி.

நேப்​பியர் நகரில் நேற்று நடை​பெற்ற 2-வது ஒரு​நாள் போட்டி மழை காரண​மாக 34 ஓவர்​களாக நடத்​தப்​பட்​டது. முதலில் பேட் செய்த மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி 9 விக்​கெட்​கள் இழப்​புக்கு 247 ரன்​கள் குவித்​தது. கேப்​டன் ஷாய் ஹோப் 69 பந்​துகளில், 4 சிக்ஸர்​கள், 13 பவுண்​டரி​களு​டன் 109 ரன்​கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்​தார்.

நியூஸிலாந்து அணி சார்​பில் நேதன் ஸ்மித் 4, கைல் ஜேமிசன் 3 விக்​கெட்​கள் வீழ்த்​தினர். 248 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த நியூஸிலாந்து அணி ஒரு கட்​டத்​தில் 31 ஓவர்​களில் 5 விக்​கெட்​கள் இழப்​புக்க 208 ரன்​கள் எடுத்​திருந்​தது. டேவன் கான்வே 84 பந்துகளில், ஒரு சிக்​ஸர், 13 பவுண்​டரி​களு​டன் 90 ரன்​களும், ரச்சின் ரவீந்​திரா 46 பந்​துகளில், 5 சிக்​ஸர்​கள், 4 பவுண்​டரி​களு​டன் 56 ரன்​களும் விளாசி ஆட்​ட​மிழந்​தனர். வில் யங் 11, மார்க் சாப்​மேன் 0, மைக்​கேல் பிரேஸ்​வெல் 11 ரன்​களில் நடையை கட்​டினர்.

18 பந்​துகளில் 40 ரன்​கள் சேர்க்க வேண்​டும் என்ற நிலையில் டாம் லேதம், கேப்​டன் மிட்​செல் சாண்ட்​னர் அதிரடியாக விளையாட நியூஸிலாந்து அணி 33.3 ஓவர்​களில் 5 விக்​கெட்​கள் இழப்​புக்கு 248 ரன்​கள் எடுத்து வெற்றி பெற்​றது. டாம் லேதம் 29 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 4 பவுண்​டரி​களு​டன் 39 ரன்​களும், மிட்​செல் சாண்ட்​னர் 15 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 3 பவுண்​டரி​களு​டன் 34 ரன்​களும் விளாசி ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர்.

5 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி 3 ஆட்​டங்​கள் கொண்ட ஒரு​நாள் போட்​டித் தொடரை 2-0 என கைப்​பற்​றியது. முதல் ஒரு​நாள் போட்​டி​யில் அந்த அணி 7 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றிருந்​தது. கடைசி மற்​றும் 3-வது போட்டி வரும் 22-ம் தேதி ஹாமில்​டனில் நடை​பெறுகிறது.

SCROLL FOR NEXT