விளையாட்டு

இந்திய அணியுடன் ஒரு நாள் தொடர்: நியூஸிலாந்து அணி அறிவிப்பு

செய்திப்பிரிவு

ஆக்லாந்து: இந்​தி​யா​வுடன் ஒரு​நாள் தொடரில் விளை​யாட​வுள்ள நியூஸிலாந்து கிரிக்​கெட் அணி அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்​திய அணி நியூஸிலாந்​தில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்டு 5 டி20, 5 ஒரு​நாள் மற்​றும் 2 டெஸ்ட் கிரிக்​கெட் போட்​டிகள் கொண்ட தொடர்​களில் விளை​யாட​வுள்​ளது. இரு அணி​களுக்​கும் இடையி​லான டி20 தொடர் முதலில் நடை​பெறும். முதலா​வது சர்​வ​தேச டி20 ஆட்​டம் வரும் 22-ம் தேதி கிறைஸ்ட்​சர்ச்​சில் நடை​பெறவுள்​ளது.

இதைத்​தொடர்ந்​து, ஒரு​நாள் கிரிக்​கெட் தொடர் நவம்​பர் 4-ம் தேதி ஆக்​லாந்​தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்​தில் தொடங்​கு​கிறது.

இந்​நிலை​யில் 5 ஒரு​நாள் போட்​டிகளில் பங்​கேற்​கும் நியூஸிலாந்து அணி நேற்று அறிவிக்​கப்​பட்​டது. முதல் 3 போட்​டிகளுக்​காக ஓர் அணி​யும், கடைசி 2 போட்​டிகளுக்​காக ஓர் அணி​யும் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளது.

முதல் 3 ஒரு​நாள் போட்​டிகளுக்​கான நியூஸிலாந்து அணி விவரம்:

மிட்​செல் சாண்ட்​னர் (கேப்​டன்), மைக்​கேல் பிரேஸ்​வெல், மார்க் சாப்​மேன், டேவன் கான்​வே, ஜேக்​கப் டஃபி, மேட் ஹென்​றி, கைல் ஜேமிசன், டாம் லேதம் (விக்​கெட் கீப்​பர்), டேரில் மிட்​செல், கிளென் பிலிப்​ஸ், ரச்​சின் ரவீந்​தி​ரா, நேதன் ஸ்மித், பிளேர் டிக்​னர், வில் யங்.

4 மற்​றும் 5-வது ஒரு​நாள் போட்​டிக்​கான அணி விவரம்:

மிட்​செல் சாண்ட்​னர் (கேப்​டன்), ஃபின் ஆலன், மைக்​கேல் பிரேஸ்​வெல், மார்க் சாப்​மேன், கிறிஸ்​டியன் கிளார்க், ஜேக்​கப் டஃபி, மாட் பிஷர், லாக்கி ஃபெர்​குசன், மிட்ச் ஹே (விக்​கெட் கீப்​பர்), நிக் கெல்​லி, டிம் செய்​பர்ட் (விக்​கெட் கீப்​பர்), பிளேர்​ டிக்​னர்​, ​வில்​ யங்​.

SCROLL FOR NEXT