விளையாட்டு

மே.இ.தீவுகளை வீழ்த்தியது நியூஸிலாந்து

செய்திப்பிரிவு

கயானா: மேற்கு இந்​தி​யத் தீவு​கள் - நியூஸிலாந்து அணி​கள் நேற்று முன்​தினம் இரவு கயா​னா​வில் 3-வது ஒரு​நாள் கிரிக்கெட் போட்டியில் மோதின. முதலில் பேட் செய்த மேற்கு இந்​தி​யத் தீவுகள் அணி​யானது நியூஸிலாந்து அணி​யின் சுழற்​பந்து வீச்சை தாக்​குப்​பிடிக்க முடி​யாமல் 37.1 ஓவர்​களில் 140 ரன்​களுக்கு ஆட்டமிழந்​தது. அதி​கபட்​ச​மாக கீசி கார்ட்டி 48, அக்​கீம் அகஸ்டி 26, ஷிம்​ரன் ஹெட்​மயர் 26 ரன்​கள் சேர்த்​தனர்.

நியூஸிலாந்து அணி சார்​பில் சுழற்​பந்து வீச்​சாள​ரான ஜெய்​டன் லெனாக்ஸ் 4 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார். மிட்​செல் சாண்ட்​னர், மைக்​கேல் பிரேஸ்​வெல் ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை வீழ்த்தினர். ஒரு கட்​டத்​தில் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி 67 ரன்களுக்கு ஒரு விக்​கெட்டை மட்​டுமே இழந்​திருந்​தது. ஆனால் அதன் பின்​னர் மேற்​கொண்டு 73 ரன்​களை சேர்ப்​ப​தற்​குள் விக்கெட்​களை கொத்​தாக தாரை வார்த்​தது.

141 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த நியூஸிலாந்து அணி 39.3 ஓவர்களில் 4 விக்​கெட்​களை மட்​டும் இழந்து வெற்றி பெற்​றது. ஹென்றி நிக்​கோல்ஸ் 24, வில் யங் 23, மார்க் சாப்​மேன் 7, டேரில் மிட்​செல் 28 ரன்​கள் சேர்த்து ஆட்​ட​மிழந்​தனர். டாம் லேதம் 31, டீன் ஃபாக்​ஸ்​கி​ராப்ட் 22 ரன்​கள் சேர்த்து களத்​தில் இருந்​தனர். 6 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி 5 ஆட்​டங்​கள் கொண்ட ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டித் தொடரில் 2-1 என முன்னிலை வகிக்​கிறது.

SCROLL FOR NEXT