விளையாட்டு

டேவன் கான்வே 227 ரன்கள் விளாசல்: 575 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது நியூஸி.

செய்திப்பிரிவு

மவுண்ட் மவுங்கனி: மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்கு எதி​ரான கடைசி மற்​றும் 3-வது டெஸ்ட் கிரிக்​கெட் போட்​டி​யின் முதல் இன்​னிங்​ஸில் நியூஸிலாந்து அணி 8 விக்​கெட்​கள் இழப்​புக்கு 575 ரன்​கள் குவித்து டிக்​ளேர் செய்​தது. தொடக்க வீர​ரான டேவன் கான்வே இரட்டை சதம் விளாசி அசத்​தி​னார்.

மவுண்ட் மவுங்​க​னி​யில் உள்ள பே ஓவல் மைதானத்​தில் நடை​பெற்று வரும் இந்த டெஸ்ட் போட்​டி​யில் டாஸ் வென்று பேட் செய்த நியூஸிலாந்து அணி முதல் நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 90 ஓவர்​களில் ஒரு விக்​கெட் இழப்​புக்கு 334 ரன்​கள் குவித்​தது. டாம் லேதம் 137 ரன்​கள் எடுத்து ஆட்​ட​மிழந்​தார். டேவன் கான்வே 178 ரன்​களும், ஜேக்​கப் டஃபி 9 ரன்​களும் சேர்த்து களத்​தில் இருந்​தனர்.

நேற்று 2-வது நாள் ஆட்​டத்தை தொடர்ந்து விளை​யாடிய நியூஸிலாந்து அணி 155 ஓவர்​களில் 8 விக்​கெட்​கள் இழப்​புக்கு 575 ரன்​கள் குவித்த நிலை​யில் முதல் இன்​னிங்ஸை டிக்​ளேர் செய்​தது. அபார​மாக விளை​யாடி இரட்டை சதம் அடித்த டேவன் கான்வே 367 பந்​துகளில், 31 பவுண்​டரி​களு​டன் 227 ரன்​கள் குவித்த நிலை​யில் ஜஸ்​டின் கிரீவ்ஸ் பந்​தில் எல்​பிடபிள்யூ ஆனார்.

ஜேக்​கப் டஃபி 17, கேன் வில்​லி​யம்​சன் 31, டேரில் மிட்​செல் 11, டாம் பிளண்​டல் 4, கிளென் பிலிப்ஸ் 29, ஸாக் ஃபவுல்க்ஸ் 1 ரன்​னில் நடையை கட்​டினர். தனது 5-வது அரை சதத்தை கடந்த ரச்​சின் ரவீந்​திரா 106 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 6 பவுண்​டரி​களு​டன் 72 ரன்​களும், அஜாஸ் படேல் 30 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 3 பவுண்​டரி​களு​டன் 30 ரன்​களும் சேர்த்து ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர்.

மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி​கள் தரப்​பில் ஜெய்​டன் சீல்​ஸ், ஆண்​டர்​சன் பிலிப், ஜஸ்​டின் கிரீவ்ஸ் ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை வீழ்த்​தினர். இதையடுத்து பேட் செய்த மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி 2-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 23 ஓவர்​களில் விக்​கெட் இழப்​பின்றி 110 ரன்​கள் எடுத்​திருந்​தது. தனது 2-வது அரை சதத்தை கடந்த பிரண்​டன் கிங் 78 பந்​துகளில், 9 பவுண்​டரி​களு​டன் 55 ரன்​களும், ஜாண் கேம்​பல் 60 பந்​துகளில், 7 பவுண்​டரி​களு​டன் 45 ரன்​களும் சேர்த்​தனர். 465 ரன்​கள் பின்​தங்​கி​யுள்ள மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி இன்று 3-வது நாள் ஆட்​டத்தை தொடர்ந்​தது.

கேம்​பல் 45, பிரண்​டன் கிங் 63 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அவர்கள் இருவரது விக்கெட்டையும் ஜேக்​கப் டஃபி கைப்பற்றினார். தொடர்ந்து டெவின் 27 மற்றும் அலிக் அதனீஸ் 45 ரன்களில் ஆகியோர் ஆட்டமிழந்தனர். தற்போது ஜஸ்டின் கிரீவ்ஸ் மற்றும் ஹோட்ஜ் இணைந்து சிறப்பாக விளையாடி வருகின்றனர். முதல் இன்னிங்ஸில் 93 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 344 ரன்கள் எடுத்துள்ளது மேற்கு இந்தியத் தீவுகள் அணி.

SCROLL FOR NEXT