ஆக்லாந்து: இந்திய கிரிக்கெட் அணி இம்மாத இறுதியில் நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20, 5 ஒருநாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மோதுகிறது.
இதில் டி20 தொடர் வரும் 22-ம் தேதி கிறைஸ்ட்சர்ச் நகரில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான நியூஸிலாந்து அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளரான 25 வயதாகும் வில் ஓ’ரூர்க் காயம் காரணமாக விலகி உள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது வில் ஓ’ரூர்க், தொடை பகுதியில் காயம் அடைந்திருந்தார்.