விளையாட்டு

டி 20 உலகக் கோப்பை: இந்திய அணிக்கு புது ஜெர்சி

செய்திப்பிரிவு

ராய்ப்பூர்: ஆடவருக்கான 10-வது ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2026-ம் ஆண்டு பிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள 8 நகரங்களில் நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் இந்தியா ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ளது.

இதே பிரிவில் பாகிஸ்தான், அமெரிக்கா, நெதர்லாந்து, நமீபியா அணிகளும் உள்ளன. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பிப்ரவரி 7-ல் அமெரிக்காவுடன் மோத உள்ளது. இந்நிலையில் இந்த டி 20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் ஜெர்சி வெளியீடு நேற்று நடைபெற்றது.

ராய்ப்பூரில் நேற்று நடைபெற்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியின் போது இந்திய அணியின் ஜெர்சியை ரோஹித் சர்மா, திலக் வர்மா ஆகியோர் வெளியிட்டனர்.

SCROLL FOR NEXT