சர்பராஸ் கான்
மும்பை: தோனி போன்ற ஒருவர் உடனோ அல்லது சிஎஸ்கே அணி உடனோ விளையாடுவேன் என நான் ஒருபோதும் நினைத்ததில்லை என இந்திய கிரிக்கெட் வீரர் சர்பராஸ் கான் தெரிவித்துள்ளார்.
அடுத்த சில மாதங்களில் ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசன் தொடங்கவுள்ளது. இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட உள்ளார் மும்பையை சேர்ந்த சர்பராஸ் கான். அவரை கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியது குறிப்பிடத்தக்கது.
“ஐபிஎல் கிரிக்கெட் முக்கியமானது. ஏனெனில், அதில் விளையாடும் வீரர்கள் லைம்லைட்டில் இருப்பார்கள். சர்வதேச நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் இதில் பங்கேற்கின்றனர். ‘ஒயிட் பால்’ கிரிக்கெட் இப்போது மேம்பட்டுள்ளது.
இதற்கு முன்பு எனக்கு விளையாட வாய்ப்பு கிடைக்காத நேரத்தில் அதற்காக நான் தொடர்ந்து போராடி கொண்டே இருந்தேன். அந்த வகையில் தோனி போன்ற ஒருவர் உடனோ அல்லது சிஎஸ்கே அணி உடனோ விளையாடுவேன் என நான் ஒருபோதும் நினைத்ததில்லை. இப்போதைக்கு பவர் ஹிட்டிங்கில் கவனம் செலுத்தி வருகிறேன். டி20 கிரிக்கெட்டில் அனுபவித்து விளையாட உள்ளேன்” என சர்பராஸ் கான் தெரிவித்துள்ளார். தற்போது மும்பை அணிக்காக அவர் ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறார்.