அனுஷ்கா, தேவ் மீனா

 
விளையாட்டு

தேசிய சீனியர் தடகளம்: அனுஷ்கா, தேவ் மீனா தேசிய சாதனை

செய்திப்பிரிவு

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்று வரும் 65-வது மாநிலங்களுக்கு இடையிலான சீனியர் தடகளப் போட்டியில் அனுஷ்கா யாதவ், தேவ் மீனா ஆகியோர் புதிய தேசிய சாதனை படைத்தனர்.

நேற்று நடைபெற்ற ஆடவர் போல் வால்ட் பிரிவு போட்டியில் மத்திய பிரதேசத்தின் தேவ் மீனா 5.46 மீட்டர் உயரம் தாண்டி புதிய தேசிய சாதனையைப் படைத்தார். சங்கிலியால் பிணைக்கப்பட்ட மகளிர் குண்டு எறிதல் போட்டியில் உத்தர பிரதேச வீராங்கனை அனுஷ்கா யாதவ் 67.02 மீட்டர் தூரத்துக்கு எறிந்து புதிய தேசிய சாதனையைச் செய்தார். மகளிர் 100 மீட்டர் தடை ஓட்டப் போட்டியில் ஜோதி யார்ராஜி 12.99 விநாடிகளில் ஓடி வந்து தங்கம் வென்றார்.

SCROLL FOR NEXT