சாம்பியன் பட்டம் வென்ற எல்லோ டிரைன் பள்ளி மாணவி​கள்.

 
விளையாட்டு

தேசிய கூடைப்பந்துப் போட்டி: எல்லோ டிரைன் சாம்பியன்

செய்திப்பிரிவு

சென்னை: ஐஎஸ்​எஸ்ஓ தேசிய அளவி​லான 17 வயதுக்​குட்​பட்ட மகளிர் கூடைப்​பந்​துப் போட்​டி​யில் தமிழகத்​தைச் சேர்ந்த எல்லோ டிரைன் பள்ளி மாணவி​கள் சாம்​பியன் பட்​டம் வென்​றனர்.

சத்​தீஸ்​கர் மாநிலம் ராய்ப்​பூரில் கடந்த 10-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை இப்​போட்​டிகள் நடை​பெற்​றன. நாடு முழு​வ​தி​லும் இருந்து 46 பள்​ளி​களைச் சேர்ந்த 51 அணி​கள் பங்​கேற்​றன. இறு​திப் போட்​டி​யில் எல்லோ டிரைன் பள்ளி அணி 58-40 என்ற புள்​ளி​கள் கணக்​கில் தி ஸ்ரீராம் பள்ளி அணியை வீழ்த்தி பட்​டம் வென்​றது.

இறு​திப் போட்​டி​யில் கேப்​டன் ஆர்​. பிரபன்​யா, வீராங்​க​னை​ கிரி​தி உள்ளிட்டோர் புள்​ளி​களைச் சேர்த்து அணிக்கு வெற்றி தேடித் தந்​தனர். சாம்​பியன் பட்​டம் வென்ற பள்ளி வீராங்​க​னை​களுக்கு பள்ளி நிறு​வனர் சி.ஜே.விக்​ரம், நிர்​வாகி சந்​தியா விக்​ரம் உள்​ளிட்​டோர் பாராட்டு தெரி​வித்​தனர்​.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT