மும்பை: காயம் காரணமாக மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் கிரிக்கெட் அணி வீரர்கள் குயிண்டன் டி காக், ராஜ் அங்கத் பாவா ஆகியோர் ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளனர். நடப்பு ஐபிஎல் சீசனில் குயிண்டன் டி காக், ராஜ் பாவா ஆகியோர் மும்பை அணிக்காக விளையாடி வந்தனர்.
கடந்த ஏப்ரல் 29-ம் தேதி ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியின்போது குயிண்டன் டி காக்குக்கு காயம் ஏற்பட்டது. அதேபோல் கடந்த 14-ம் தேதி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் ராஜ் பாவா காயம் அடைந்தார். இதையடுத்து இருவரும் போட்டியிலிருந்து விலகியுள்ளதாக மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.