விளையாட்டு

எம்​எல்​எஸ் கோப்​பை: இன்​டர் மியாமி சாம்பியன்

செய்திப்பிரிவு

ஃபோர்ட் லாடர்​டேல்: அர்​ஜெண்​டினா கால்​பந்து அணி​யைச் சேர்ந்த பிரபல நட்​சத்​திர வீரர் லயோனல் மெஸ்ஸி 48-வது பட்​டத்தை வென்று அசத்​தல் சாதனை புரிந்​துள்​ளார். இன்​டர் மியாமி அணிக்​காக விளை​யாடி வரும் அவர், முதல்​முறை​யாக எம்​எல்​எஸ் கோப்​பையை வென்று கொடுத்​துள்​ளார்.

38 வயதாகும் அர்​ஜெண்​டினா கால்​பந்து அணி வீர​ரான லயோனல் மெஸ்​ஸி, பார்​சிலோனா எஃப்சி அணிக்​காக அதிக போட்​டிகளில் விளை​யாடி​யுள்​ளார். அதன் பின்​னர் அவர் சில காலம் பிஎஸ்ஜி அணிக்​காக களமிறங்​கி​னார். இதைத் தொடர்ந்து பிஎஸ்ஜி அணி​யில் இருந்து இன்​டர் மியாமி அணிக்கு கடந்த 2023-ம் ஆண்​டுக்​குத் தாவி​னார்.

அப்​போது முதல் அவர் இன்​டர் மியாமி அணிக்​காக விளை​யாடி வரு​கிறார். இந்​நிலை​யில் நேற்று முன்​தினம் இரவு அமெரிக்​கா​வின் புளோரிடா மாகாணாத்​தி​லுள்ள ஃபோர்ட் லாடர்​டேல் நகரில் எம்​எல்​எஸ் கோப்பை கால்​பந்து இறு​திப் போட்டி நடை​பெற்​றது.

வான்​கூவரை வீழ்த்தியது: இறு​திப் போட்​டி​யில் இன்​டர்​மி​யாமி அணி​யும், வான்​கூவர் அணி​யும் மோதின. இதில் இன்​டர் மியாமி அணி 3-1 என்ற கோல் கணக்​கில் வான் கூவர் அணியை வீழ்த்தியது.

இந்​தப் போட்​டி​யில் மெஸ்ஸி கோல் அடிக்​கா​விட்​டாலும், 2 கோல்​களை சக அணி வீரர்​கள் அடிப்​ப​தற்​காக உதவி புரிந்​திருந்​தார். இதன் ​மூலம் 48-வது கோப்​பையை தனது கால்​பந்து வரலாற்​றில் தான் சார்ந்த அணிக்​காக பெற்​றுக் கொடுத்து சாதனை புரிந்துள்ளார் மெஸ்​ஸி.

SCROLL FOR NEXT