மெஸ்ஸி
மியாமி: கால்பந்து உலகின் நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்ஸி, கிளப் அளவில் இன்டர் மியாமி அணிக்காக விளையாடி வருகிறது. இந்நிலையில், அந்த அணிக்காக ஒரே ஆட்டத்தில் நான்கு கோல்களை அவர் பதிவு செய்து அசத்தினார்.
இந்திய நேரப்படி இன்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் Montreal அணிக்கு எதிராக இன்டர் மியாமி விளையாடியது. இதில் 7-1 என்ற கோல் கணக்கில் இன்டர் மியாமி வெற்றி பெற்றது.
அமெரிக்காவில் கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையே எம்எல்எஸ் தொடர் நடைபெறும். 30 அணிகள் இதில் பங்கேற்றுள்ளன. தலா 15 அணிகளாக இரு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் நடப்பு சாம்பியனான இன்டர் மியாமி அணி, ஈஸ்டர்ன் கான்பர்ன்ஸ் பிரிவில் இரண்டாம் இடத்தில் உள்ளது.
மெஸ்ஸி அசத்தல்
Montreal அணிக்கு எதிரான ஆட்டத்தில் மெஸ்ஸி நான்கு கோல்களை பதிவு செய்தார். அதோடு சக அணி வீரர் கோல் பதிவு செய்யவும் உதவி செய்தார். ஆட்டத்தின் 40, 52, 83 மற்றும் 96-வது நிமிடத்தில் மெஸ்ஸி கோல் பதிவு செய்தார். இதன் மூலம் பல்வேறு சாதனைகளை அவர் படைத்துள்ளார்.
எம்எல்எஸ் தொடரில் ஒரே போட்டியில் நான்கு கோல்களை மெஸ்ஸி பதிவு செய்வது இதுவே முதல் முறை. சர்வதேச அளவில் 8 முறை குறைந்தபட்சம் 4+ கோல்களை மெஸ்ஸி பதிவு செய்துள்ளார். இதில் ஒரு முறை மட்டுமே அர்ஜெண்டினா அணிக்காக 4+ கோல்களை மெஸ்ஸி பதிவு செய்துள்ளார். மற்ற அனைத்து அவர் ஆடிய கிளப் அணிகளுக்காக பதிவு செய்தவை.
நடப்பு எம்எல்எஸ் தொடரில் அதிக கோல்களை பதிவு செய்த வீரர்களுக்கான பட்டியலில் மெஸ்ஸி இதன் மூலம் முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2023-ல் இன்டர் மியாமி கிளப் அணியுடன் மெஸ்ஸி இணைந்தார். முன்னதாக, பார்சிலோனா மற்றும் பிஎஸ்ஜி கிளப் அணிகளில் மெஸ்ஸி விளையாடி உள்ளார். கடந்த ஃபிபா உலகக் கோப்பை தொடரில் (2026) மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி இரண்டாம் இடம் பிடித்தது.