கோப்புப்படம்

 
விளையாட்டு

ஆடவர் தேசிய கபடி சாம்பியன்ஷிப் இன்று தொடக்கம்

செய்திப்பிரிவு

வதோதரா: 72-வது சீனியர் தேசிய ஆடவர் கபடி சாம்பியன்ஷிப் போட்டி, வதோதராவில் உள்ள சமா உள்ளரங்க மைதானத்தில் இன்று (24-ம் தேதி) தொடங்குகிறது. வரும் 27-ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் நாடு முழுவதிலும் இருந்து 31 அணிகள் பங்கேற்கின்றன.

இந்திய அமெச்சூர் கபடி கூட்டமைப்பின் ஆதரவுடன் இந்த போட்டி நடைபெறுகிறது. இந்த தொடரை குஜராத் கபடி சங்கம், வதோதரா கபடி சங்கம் ஆகியவை இணைந்து நடத்துகின்றன. நடப்பு சாம்பியனான சர்வீசஸ் அணி, தனது பட்டத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில் களமிறங்குகிறது.வலுவான வீரர்களைக் கொண்ட ரயில்வே, ஹரியானா, மகாராஷ்டிரா ஆகிய அணிகளும் கடும் சவாலை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

          
SCROLL FOR NEXT