கோல் கீப்பர் மானுவல் நோயர்
பெர்லின்: பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் வரும் ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் பங்கேற்கும் 26 பேர் கொண்ட ஜெர்மனி அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
இதில் 40 வயதான நட்சத்திர கோல் கீப்பரான மானுவல் நோயர் சேர்க்கப்பட்டுள்ளார். சீனியர் வீரரான மானுவல் நோயர் கடந்த 2024-ம் ஆண்டு ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கால்பந்து தொடருடன் ஓய்வு பெற்றிருந்தார்.
ஆனால் உலகக் கோப்பை தொடருக்காக ஜெர்மனி அணியின் பயிற்சியாளர் ஜூலியன் நாகல்ஸ்மான் மானுவல் நோயரை ஓய்விலிருந்து மீண்டு வந்து விளையாட சம்மதிக்க வைத்துள்ளார். மானுவல் நோயர் ஜெர்மனி அணிக்காக 124 போட்டிகளில் விளையாடி உள்ளார்.