விளையாட்டு

மல்​யுத்​தத்தில் மணீஷாவுக்கு தங்கம்

செய்திப்பிரிவு

அஸ்தானா: கஜகஸ்தானில் நடை​பெற்ற மகளிர் உலக மல்​யுத்​தப் போட்​டி​யில் இந்​திய வீராங்​கனை மணீஷா பன்​வாலா தங்​கம் வென்று வரலாற்​றுச் சாதனை படைத்​துள்​ளார்.

அஸ்தானா நகரில் நேற்று நடை​பெற்ற மகளிர் 59 கிலோ இறுதிச் சுற்​றுப் போட்​டி​யில் மணீஷா 8-6 என்ற புள்​ளி​கள் கணக்​கில் அமெரிக்க வீராங்​கனை அபிகெயில் நெட்​டேவை வீழ்த்தி தங்​கம் வென்​றார். இதன்​மூலம் உலக மல்​யுத்​தப் போட்​டி​யில் தங்​கம் வென்ற முதல் இந்​திய வீராங்​கனை என்ற வரலாற்​றுச் சாதனையை அவர் படைத்​தார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT