விளையாட்டு

சிஎஸ்கே அணி​யில் மேக்​நீல் நோரோன்ஹா

செய்திப்பிரிவு

சென்னை: நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி​யின் வேகப்பந்து வீச்சு ஆல்​ர​வுண்​ட​ரான ராமகிருஷ்ணா கோஷ் காயம் காரண​மாக வில​கி​யிருந்​தார். இந்​நிலை​யில் அவருக்கு பதிலாக கர்​நாட​காவை சேர்ந்த சுழற்​பந்து வீச்சு ஆல்​ர​வுண்​ட​ரான 24 வயதான மேக்நீல் நோரோன்ஹாவை ரூ.30 லட்​சத்​துக்கு ஒப்​பந்​தம் செய்​துள்​ளது சிஎஸ்கே அணி.

2024-25-ம் ஆண்டு சீசனில் நடை​பெற்ற கர்​னல் சி.கே. நாயுடு கோப்பை (யு-23) தொடரில் அதிக ரன்​கள் குவித்​ததற்​காக பிசிசிஐ-யின் மதிப்​புமிக்க எம்​.ஏ.சிதம்​பரம் விருது மேக்​நீல் நோரோன்​ஹாவுக்கு வழங்​கப்​பட்​டிருந்​தது. இதைத் தொடர்ந்து சையது முஸ்டாக் அணி டி 20 தொடரில் கார்​நாடகா அணிக்​காக விளையாடும் வாய்ப்பு மேக்​நீல் நோரோன்​ஹாவுக்கு கிடைத்​தது. அந்​தத் தொடரில் அவர், 3 ஆட்டங்களில் விளையாடி இருந்தார்.

SCROLL FOR NEXT