ரிஷப் பந்த்

 
விளையாட்டு

ரிஷப் பந்த் பொறுப்பான ஆட்டம்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்தியது லக்னோ

வேட்டையன்

ஹைதராபாத்: நடப்பு ஐபிஎல் சீசனின் 10-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி.

ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்து வீசியது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் இன்னிங்ஸை தொடங்கினர். இதில் அபிஷேக் சர்மா (0), ஹெட் (7) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அந்த அணியின் கேப்டன் இஷான் கிஷன், 1 ரன்னில் வெளியேறினார். லிவிங்ஸ்டன் 14 ரன்களில் ஆட்டமிழந்தார்.

          

7.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 26 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது சன்ரைசர்ஸ் அணி. அபிஷேக் சர்மா, ஹெட், இஷான் கிஷன், லிவிங்ஸ்டன் என நான்கு பேரும் சொற்ப ரன்களில் வெளியேறினர். தடுமாறிய அந்த அணிக்கு நம்பிக்கை கொடுத்தனர் கிளாசனும், நிதிஷ் குமார் ரெட்டியும். 5-வது விக்கெட்டுக்கு 116 ரன்களை அவர்கள் சேர்த்தனர்.

நிதிஷ் குமார், 33 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கிளாசான், 41 பந்துகளில் 62 ரன்கள் சேர்த்தார். அதன் பின்னர் வந்த ஹர்ஷ் துபே (0), ஷிவாங் குமார் (5), ஹர்ஷல் படேல் (4) ஆகியோர் தங்கள் விக்கெட்டை இழந்தனர். 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது.

157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை லக்னோ அணி விரட்டியது. மிட்செல் மார்ஷ், 14 ரன்களில் வெளியேறினார். எய்டன் மார்க்ரம் 27 பந்துகளில் 45 ரன்களை அதிரடியாக சேர்த்தார். அவர் ஆட்டமிழந்ததும் லக்னோ அணியின் ரன் குவிப்பு வேகம் மந்தமானது. ஆயுஷ் படோனி, நிக்கோலஸ் பூரன், அப்துல் சமத் ஆகியோர் சீரான இடைவெளியில் தங்கள் விக்கெட்டுகளை இழந்தனர்.

மறுமுனையில் பொறுப்புடன் ஆடிய லக்னோ கேப்டன் ரிஷப் பந்த், 50 பந்துகளில் 68 ரன்கள் சேர்த்தார். 19.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் லக்னோ அணி இந்த சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்தது. தங்கள் அணி வெற்றிக்கோட்டை நெருங்கிக் கொண்டிருந்த வேளையில் ஆனந்த கண்ணீர் துளிகளை சிந்தினார் எல்எஸ்ஜி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா. இன்று பெங்களூருவில் நடைபெறும் ஆர்சிபி உடனான லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பந்து வீசுகிறது.

SCROLL FOR NEXT