அயர்லாந்து கேப்​டன்​ லோர்கன் டக்கர்

 
விளையாட்டு

லோர்கன் டக்கர் 94 ரன்கள் விளாசல்: அயர்லாந்து அணி அபார வெற்றி - T20 WC 2026

செய்திப்பிரிவு

கொழும்பு: ஐசிசி டி20 உல​கக்​ கோப்​பை கிரி​க்​கெட்​ தொடரில்​ ‘பி’ பிரி​வில்​ நேற்​று ​கொழும்​பு நகரில்​ உள்​ள எஸ்​எஸ்​சி மை​தானத்​தில்​ நடை​பெற்​ற லீக்​ ஆட்​டத்​தில்​ அயர்​லாந்​து - ஓமன்​ அணி​கள்​ மோ​தின.

​முதலில்​ பேட்​ செய்​த அயர்​லாந்​து அணி ஒரு கட்​டத்​தில்​ 7.3 ஓவர்​களில்​ 64 ரன்​களுக்​கு 4 வி​க்​கெட்​களை இழந்​து தடு​மாறியது. டிம்​ டெக்​டர்​ 5, ரோஸ்​ அடேர்​ 14, ஹாரி டெக்​டர்​ 14, கர்​திஷ் கேம்​பர்​ 12 ரன்​களில்​ நடையை கட்​டினர்​. இதன்​ பின்​னர்​ 5-வது வி​க்​கெட்​டு​க்​கு இணைந்​த கேப்​டன்​ லோர்​க​ன்​ டக்​கர்​, கரேத்​ டெலானி ஜோடி ஓமன்​ அணி​யின்​ பந்​து​வீச்​சை வெளுத்​து ​வாங்​கியது. கரேத்​ டெலானி 30 பந்​துகளில்​, 4 சிக்​ஸர்​கள்​, 3 பவுண்​டரி​களுடன்​ 56 ரன்​கள்​ ​விளாசி ஆட்​ட​மிழந்​தா​ர்​. 5-வது வி​க்​கெட்​டு​க்​கு லோர்​க​ன்​ டக்​கர்​, கரேத்​ டெலானி ஜோடி 56 பந்​துகளில்​ 101 ரன்​கள்​ கு​வித்​தது. இதைத்​ தொடர்​ந்​து களமிறங்​கிய ஜார்​ஜ் ​டாக்​ரெல்​லும்​ மட்​டையை சுழற்​றி​னார்​.

          

லோர்​க​ன்​ டக்​கர்​ 51 பந்​துகளில்​, 4 சிக்​ஸர்​கள்​, 10 பவுண்​டரி​களுடன்​ 94 ரன்​களும்​, ஜார்​ஜ் ​டாக்​ரெல்​ 9 பந்​துகளில்​, 5 சிக்​ஸர்​களுடன்​ 35 ரன்​களும்​ ​விளாச அயர்​லாந்​து அணி 20 ஒவர்​களின்​ ​முடி​வில்​ 5 வி​க்​கெட்​கள்​ இழப்​பு​க்​கு 235 ரன்​கள் கு​வித்​தது.

லோர்​க​ன்​ டக்​கர்​, ஜார்​ஜ் ​டாக்​ரெல் ஜோடி 19 பந்​து களில்​ 70 ரன்​களை கு​வித்​து மிரட்​டியது. கடைசி 4 ஓவர்​களில்​ மட்​டும்​ அயர்​லாந்​து அணி 86 ரன்​களை வேட்​டை​யாடியது. ​முன்​ன​தாக லோர்​க​ன்​ டக்​டர்​ 18 ரன்​களில்​ இருந்​த ​போது ஸ்​டெம்​பிங்​ ​முறை​யில்​ ஆட்​ட​மிழப்​ப​தில்​ இருந்​து த​ப்​பித்​தா​ர்​. ஓமன்​ அணி தரப்​பில்​ இடதுகை சுழற்​பந்​து​வீச்​சாள​ரான ஷகீல்​ அகமது 3 வி​க்​கெட்​களை கைப்​பற்​றி​னார்​.

237 ரன்​கள்​ இல​க்​குடன்​ பேட்​ செய்​த ஓமன்​ அணி 24 ரன்​களுக்​கு 2 வி​க்​கெட்​களை இழந்​தது. கேப்​டன்​ ஜ​திந்​தர்​ சிங்​ 7, ஆஷிஸ்​ ஓடே​ரா 1 ரன்​னில்​ ஆட்​ட​மிழந்​தனர்​. இதைத்​ தொடர்​ந்​து களமிறங்​கிய ஹமது மிர்​சா, அமிர்​ கலீ​முடன்​ இணைந்​து மட்​டையை சுழற்​றி​னார்​. இத​னால்​ 10 ஓவர்​களில்​ ஓமன்​ அணி 93 ரன்​களை கு​வித்​தது. சிறப்​பாக பேட்​ செய்​து வந்​த அமிர்​ கலீம்​ 29 பந்​துகளில்​, 2 சிக்​ஸர்​கள்​, 5 பவுண்​டரி​களுடன்​ 50 ரன்​கள்​ எடு​த்​த நிலை​யில்​ மெக்​கார்​த்​தி பந்​தில்​ ஆட்​ட​மிழந்​தா​ர்​.

இதைத்​ தொடர்​ந்​து ​வி​நாயக்​ சுக்​லா 0, ​முகமது நதீம்​ 1 ரன்​களில்​ நடையை கட்​டினர்​. ஹமது மிர்​சா 37 பந்​துகளில்​, ஒரு சிக்​ஸர்​, 6 பவுண்​டரி​களுடன்​ 46 ரன்​கள்​ எடு​த்​த நிலை​யில்​ ரன்​ அவுட்​ ஆ​னார்​. இதன்​ பின்​னர்​ ஓமன்​ அணி மளமளவென வி​க்​கெட்​களை பறி​கொடு​த்​து 18 ஓவர்​களில்​ 139 ரன்​களுக்​கு ஆட்​ட​மிழந்​தது. அந்​த அணி தனது கடைசி 8 வி​க்​கெட்​களை 42 ரன்​களுக்​கு ​தா​ரை ​வார்​த்​தது. ஒட்​டுமொத்​த​மாக அந்​த அணி​யின்​ 8 பேட்​ஸ்​மேன்​கள்​ ஒற்​றை இல​க்​க ரன்​னில்​ நடையை கட்​டினர்​.

அயர்​லாந்​து அணி தரப்​பில்​ ஜோஷ் லிட்​டில்​ 4 ஓவர்​களை வீசி 16 ரன்​களை வழங்​கி 3 வி​க்​கெட்​களை வீழ்​த்​தி​னார்​. மேத்​யூ ஹம்​ப்​ரேஷ், ​பார்​ரி மெக்​கார்​த்​தி ஆகியோர்​ தலா 2 வி​க்​கெட்​களை கைப்​பற்​றினர்​. 96 ரன்​கள்​ ​வித்​தி​யாசத்​தில்​ வெற்​றி பெற்​ற அயர்​லாந்​து அணி​க்​கு இது ​முதல்​ வெற்​றி​யாக அமைந்​தது.

3 ஆட்​டங்​களில்​ ​விளை​யாடி உள்​ள அந்​த அணி 2 தோல்​வி, ஒரு வெற்​றி​யுடன்​ 2 புள்​ளிகள்​ பெற்​று தனது பிரி​வில்​ 4-வது இடத்​தி உள்​ளது. ஓமன்​ அணி​க்​கு இது ஹாட்​ரி​க்​ தோல்​வி​யாக அமைந்​தது. இதன்​ மூலம்​ அந்​த அணி சூப்​பர்​ 8 சுற்​றுக்​கு ​முன்​னேறும்​ ​வாய்​ப்​பை இழந்​து ​முதல்​ அணி​யாக தொடரில்​ இருந்​து வெளியேறுவதை உறு​தி செய்​தது.

2-வது அ​தி​கபட்​ச ஸ்​கோர்​: டி20 உல​கக்​ கோப்​பை தொடரில்​ நேற்​று ஓமனுக்​கு எ​தி​ரான ஆட்​டத்​தில்​ அயர்​லாந்​து அணி 5 வி​க்​கெட்​கள்​ இழப்​பு​க்​கு 235 ரன்​கள்​ கு​வித்​தது. இது டி20 உல​கக்​ கோப்​பை வரலாற்​றில்​ 2-வது அ​தி​கபட்​ச ஸ்​கோ​ராக அமைந்​தது. இந்​த வகை ​சாதனை​யில்​ 2007-ம்​ ஆண்​டு உல​கக்​ கோப்​பை தொடரில்​ கென்​யா​வு​க்​கு எ​தி​ராக இலங்​கை அணி 260 ரன்​கள்​ கு​வித்​தது ​முதலிடத்​தில்​ உள்​ளது.

டி20-ல்​ அ​தி​கம்​: டி20 உல​கக்​ கோப்​பை தொடரில்​ நேற்​று ஓமனுக்​கு எ​தி​ரான ஆட்​டத்​தில்​ அயர்​லாந்​து அணி 5 வி​க்​கெட்​கள்​ இழப்​பு​க்​கு 235 ரன்​கள்​ கு​வித்​தது. சர்​வ​தேச டி20 அரங்​கில்​ அந்​த அணி​யின்​ அ​தி​கபட்​ச ரன்​கு​விப்​பாக இது அமைந்​தது. இதற்​கு ​முன்​னர்​ அந்​த அணி 2023-ம் ஆண்​டு ஆஸ்​திரி​யா​வு​க்​கு எ​தி​ராக 226 ரன்​கள்​ கு​வித்​திருந்​தது.

​டாப்​பில்​ லோர்​க​ன்​ டக்​கர்​: டி20 உல​கக்​ கோப்​பை தொடரில்​ நேற்​று ஓமன்​ அணி​க்​கு எ​தி​ரான ஆட்​டத்​தில்​ அயர்​லாந்​து அணி​யின்​ கேப்​டன்​ லோர்​க​ன்​ டக்​கர்​ 96* ரன்​கள்​ ​விளாசி​னார்​. இதன்​ மூலம்​ டி20 உல​கக்​ கோப்​பை​யில்​ அயர்​லாந்​து அணி​க்​காக அ​தி​க ரன்​கள்​ ​விளாசி​ய வீரர்​ என்​ற பெரு​மை​யை லோர்​க​ன்​ டக்க​ர்​ பெற்​றார்​. இந்​த வகை​யில்​ இதற்​கு ​முன்​னர்​ கர்​திஷ் கேம்​பர்​ 2022-ம்​ ஆண்​டு உல​கக்​ கோப்​பை தொடரில்​ ஸ்​காட்​லாந்​துக்​கு எ​தி​ராக 72* ரன்​கள்​ சேர்​த்​ததே அ​தி​கபட்​ச​மாக இருந்​தது.

கேப்​ட​னாக 2-வது இடம்​: டி20 உல​கக்​ கோப்​பை தொடரில்​ நேற்​று ஓமன்​ அணி​க்​கு எ​தி​ரான ஆட்​டத்​தில்​ அயர்​லாந்​து அணி​யின்​ கேப்​டன்​ லோர்​க​ன்​ டக்​கர்​ 96* ரன்​கள்​ ​விளாசி​னார்​. இதன்​ மூலம்​ டி 20 உல​கக்​ கோப்​பை வரலாற்​றில்​ கேப்​ட​னாக அ​தி​க ரன்​கள்​ ​விளாசி​ய வீரர்​களின்​ பட்​டியலில்​ லோர்​க​ன் டக்​கர்​ 2-வது இடட்​ம பிடித்​தா​ர்​. இந்​த வகை ​சாதனை​யில்​ கிறிஸ்​ கெய்​ல்​ 98 ரன்​களுடன் முதலிடத்​தில்​ உள்ளார்.

SCROLL FOR NEXT