ஜெய்ப்பூர்: லிஸ்ட் ஏ கிரிக்கெட் போட்டிகளில் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக்கேல் பெவனை, இந்திய வீரர் ருதுராஜ் கெய்க்வாட் முந்தியுள்ளார்.
விஜய் ஹசாரே கிரிக்கெட் போட்டியில் மகாராஷ்டிர அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார் ருதுராஜ் கெய்க்வாட். பல போட்டிகளில் விளையாடி அவர் சதங்களைக் குவித்துள்ளார். நேற்று முன்தினம் கோவா அணிக்கெதிரான போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் சதம் விளாசியுள்ளார்.
இதன்மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட் போட்டிகளில் அவர் மொத்தம் 5,060 ரன்களைக் குவித்துள்ளார். இந்த போட்டிகளில் அவரது சராசரி 58.83 ஆக உள்ளது. இதன்மூலம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் மைக்கேல் பெவனின் சராசரியை (57.86) ருதுராஜ் கெய்க்வாட் முந்திஉள்ளார்.
மேலும், 99 இன்னிங்ஸ்களில் விளையாடி லிஸ்ட் ஏ போட்டிகளில் 20 சதங்களை அதிவேகமாக எட்டிய வீரர் என்ற சாதனையையும் கெய்க்வாட் செய்துள்ளார்.