விளையாட்டு

“சிஎஸ்கேவில் இருந்து வெளியேறியது உணர்ச்சிகரமான தருணம்” - மனம் திறக்கும் ரவீந்திர ஜடேஜா

செய்திப்பிரிவு

குவாஹாட்டி: ஐபிஎல் தொடரில் நேற்று முன்​தினம் குவாஹாட்​டி​யில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் 2008-ம் ஆண்டு சாம்​பிய​னான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் 5 முறை சாம்​பிய​னான சிஎஸ்கேவை வீழ்த்​தி​யது. இந்த ஆட்​டத்​தில் முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 127 ரன்​களுக்​கு ஆட்டமிழந்தது.

சிஎஸ்கே அணி​யில் இருந்து டிரேடிங் முறை​யில் ராஜஸ்​தான் அணிக்கு சென்​றிருந்த ஆல்​ர​வுண்​ட​ரான ரவீந்​திர ஜடேஜா முக்​கிய​மான கட்​டத்​தில் ஒரே ஓவரில் சர்ஃப​ராஸ் கான், ஷிவம் துபே ஆகியோரது விக்​கெட்​களை வீழ்த்தியிருந்​தார்.

          

போட்டி முடிவடைந்​ததும் ரவீந்​திர ஜடேஜா கூறிய​தாவது: 12 முதல் 13 ஆண்​டு​கள் விளை​யாடிய சிஎஸ்கே போன்ற ஒரு அணியை விட்டு வெளி​யேறு​வது ஆரம்​பத்​தில் சற்று கடின​மாக இருந்​தது. அது மிக​வும் உணர்ச்​சிகர​மான தருணம். ஆனால் இது போன்ற மாற்​றங்​களும் பயணத்​தின் ஒரு பகு​தி​தான் என்று எனக்கு நானே சொல்​லிக்​கொண்​டேன்.

ஒரு நல்ல விஷ​யம் என்​னவென்​றால், நான் முதன்​முதலில் ஐபிஎல் கோப்​பையை வென்ற அதே அணிக்கு இப்​போது திரும்​பி​யுள்​ளேன். அந்த நினை​வு​கள் எப்​போதும் என்​னுடனேயே இருக்​கும். யு-19 உலகக் கோப்​பைக்​குப் பிறகு, எனது ஐபிஎல் வாழ்க்​கையை ராஜஸ்​தான் அணி​யில்​தான் தொடங்​கினேன், எனது முதல் சீசனிலேயே கோப்​பையை​யும் வென்​றேன். அந்த நினை​வு​களை​யும் நேர்​மறை​யான எண்​ணங்​களை​யும் சுமந்து வந்​துள்​ளேன்.

இந்த புதிய குழு​வுடன் என்​னால் முடிந்​தவரை கற்​றுக்​கொள்​வதும், எனது அனுபவத்தை அணி​யுடன் பகிர்ந்து கொள்​வதுமே எனது லட்​சி​யம். இவ்​வாறு ரவீந்​திர ஜடேஜா கூறி​னார்​.

SCROLL FOR NEXT