லக்ஷயா சென், பிரனாய்
சிட்னி: ஆஸ்திரேலிய ஓபன் பாட்மிண்டன் தொடர் சிட்னி நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென் 21-17, 21-13 என்ற செட் கணக்கில் சீன தைபேவின் சுலி லியங்கை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்ற இந்திய வீரர்களான ஹெச்.எஸ்.பிரனாய் 6-21, 21-12, 21-17 என்ற செட் கணக்கில் இந்தோனேஷியாவின் யோஹனஸ் சாட் மார்செலினோவையும், ஆயுஷ் ஷெட்டி 21-11, 21-15 என்ற செட் கணக்கில் கனடாவின் சேம்யுவனையும், தருண் மன்னேபள்ளி 21-13, 17-21, 21-19 என்ற செட் கணக்கில் டென்மார்க்கின் மேக்னஸ் ஜோஹன்நேசனையும், கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-19, 19-21, 21-15 என்ற செட் கணக்கில் சீனதைபேவின் லீ சியா ஹாவோவையும் வீழ்த்தி 2-வது சுற்றில் நுழைந்தனர்.