விளையாட்டு

குசல் மெண்டிஸ், நிஷாங்கா மற்றும் பவுலர்கள் அபாரம்: மே.இ.தீவுகளை நொறுக்கிய இலங்கை

ஆர்.முத்துக்குமார்

கிங்ஸ்டன் ஜமைக்கா, சபைனா பார்க்கில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி மே.இ.தீவுகள் அணியை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 3 போட்டிகள் கொண்ட இத்தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.

டாஸ் வென்ற மே.இ.தீவுகள் முதலில் இலங்கையை பேட் செய்ய அழைத்து பெரும் தவறிழைத்தது. கேப்டன் குசல் மெண்டிஸ் 62 பந்துகளில் 72 ரன்களை விளாசி இலங்கை அணிக்கு புதிய சக்தி கொடுத்தார். மற்றும் பதுன் நிசங்கா, லியனாகே, சரித் அசலங்கா முக்கியப் பங்களிப்பு செய்ய இலங்கை அணி 303/7 என்ற ஸ்கோரை எட்டியது. பிற்பாடு சுழற்பந்து எடுக்க தீக்‌ஷனா தன் வேலையைக் காட்ட மே.இ.தீவுகள் 262 ரன்களுக்குச் சுருண்டு தோல்வி கண்டது.

சுழற்பந்து எடுக்க, பேட்டிங்கில் திணறிய மே.இ.தீவுகளில் கேப்டன் ஷேய் ஹோப் மட்டுமே அரைசதம் கடந்த வீரரானார். 66 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார் ஹோப். மற்றப் பங்களிப்புகள் இருந்தாலும் மே.இ.தீவுகள் பார்ட்னர்ஷிப் கட்டமைக்க முடியாமல் திணறியது. இலங்கை தரப்பில் துஷ்மந்த சமீரா 10 ஓவர்களில் 67 ரன்களைக் கொடுத்தாலும் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

ஆரம்பத்தில் பிட்சில் கொஞ்சம் பச்சைத் தெரிந்ததால் இலங்கை எச்சரிக்கையுடன் ஆடியது. கமிந்து மெண்டிஸை 7 வது ஓவரில் ஜெய்டன் சீல்ஸ் பெவிலியன் அனுப்ப, பவர் ப்ளேயில் 32 ரன்களையே எடுத்தது இலங்கை. நிசாங்கா எச்சரிக்கையுடன் ஆட, குசல் மெண்டிஸ் வந்தவுடனேயே அடிக்கத் தொடங்கினார். குடகேஷ் மோட்டி இவரிடம் சிக்கினார், 4 சிக்சர்களை இவரை மட்டுமே அடித்தார் குசல் மெண்டிஸ். இதில் 20வது ஓவரில் 2 சிக்சர்கள் ஒரு பவுண்டரி அடங்கும். இந்த அடிக்குப் பிறகு மோட்டி பந்து வீச வரவில்லை.

மாறாக ராஸ்டன் சேஸ், சிக்கனமாக வீசி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். குசல் மெண்டிஸ் 42 பந்தில் 50 எடுத்தார். நிசாங்காவுடன் சேர்ந்து இவர் எடுத்த 136 ரன்கள் கூட்டணி இலங்கைக்கு ஸ்திரத்தன்மையைக் கொடுத்தது. நிசாங்கா 103 பந்துகளில் 9 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 79 ரன்களையும் குசல் மெண்டிஸ் 4 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 62 பந்துகளில் 72 ரன்களையும் எடுத்தனர். அசலங்கா, லியனாகே 40+ ரன்களை எடுக்க இலங்கை 303 ரன்களை எட்டியது. மே.இ.தீவுகள் தரப்பில்

மே.இ.தீவுகள் தொடக்கத்தில் அதிரடி காட்டியது தொடக்க வீரர்கள் ஜே.பி. கிரீவ்ஸ் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 38 பந்துகளில் 45 ரன்களையும் கேம்பல் 14 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 17 ரன்களையும் எடுக்க முதல் 6 ஓவர்களில் 50 ரன்கள் என்று மே.இ.தீவுகள் பாசிட்டிவ் ஆகத் தொடங்கியது. கேம்பெல் லியனாகேவிடம் ரன் அவுட் ஆக, கிரீவ்ஸ் தீக்சனாவிடம் பவுல்டு ஆனார். கேசி கார்ட்டி 27, ஷேய் ஹோப் 56, சேஸ் 33, மோட்டி 22 என்று பங்களிப்பு செய்தாலும் கடைசியில் ஷமார் ஜோசப் அதிரடி 22 ரன்களை எடுத்தாலும் பார்ட்னர்ஷிப் இல்லாததால் மே.இ.தீவுகள் 262 ரன்களுக்குச் சுருண்டது.

SCROLL FOR NEXT