விளையாட்டு

மும்பை அணி​யுடன் இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பலப்பரீட்சை

செய்திப்பிரிவு

மும்பை: ஐபிஎல் கிரிக்​கெட் லீக் ஆட்​டத்​தில் இன்று மும்பை இந்​தி​யன்​ஸ், கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணி​கள் பலப்​பரீட்சை நடத்​தவுள்​ளன. 2026-ம்ஆண்​டுக்​கான ஐபிஎல் சீசன் நேற்று முன்​தினம் தொடங்​கியது. இந்​நிலை​யில் இந்த சீசனின் 2-வது ஆட்​டம் இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை வான்​கடே மைதானத்​தில் நடை​பெறவுள்​ளது.

5 முறை கோப்பையை வென்ற மும்பை அணி​யும், 3 முறை கோப்​பையைவென்ற கொல்​கத்தா அணி​யும் மோது​வ​தால் போட்​டிசுவாரஸ்​ய​மாக அமை​யும் என்று நம்​பலாம். மும்பை அணி ஹர்​திக்பாண்​டியா தலை​மை​யில் களமிறங்​கு​கிறது. அணி​யின் தொடக்க வீரர்​களாக அதிரடி பேட்​ஸ்​மேன் ரோஹித் சர்மா இருக்​கிறார். அவருக்கு உறு​துணை​யாக ரியான் ரிக்​கெல்​டன் உள்​ளார். இதைத் தொடர்ந்து களமிறங்​கும் சூர்​யகு​மார் யாதவ், திலக் வர்​மா, ஹர்​திக் பாண்​டி​யா,ஷெர்​பேன் ரூதர்​போர்ட் உள்​ளிட்​டோர் அணிக்கு மிகப்​பெரிய பலமாக இருக்​கின்​றனர்.

          

முதல் லீக் ஆட்​ட​மாக இது அமைவ​தால் அந்த அணி​யின் முன்​னிலை வீரர்​கள்தங்​களது உயர்​மட்ட செயல்​திறனை வெளிப்​படுத்​தக் காத்​திருக்​கின்​றனர்.

அதைப் போலவே பந்​து​வீச்​சில் ஜஸ்​பிரீத் பும்​ரா, டிரெண்ட் போல்ட் ஆகியோர் அதிரடி​யான தொடக்​கத்தை அளிக்​கக்​கூடிய​வர்​கள். இவர்​கள் எதிரணி பேட்​ஸ்​மேன்​களுக்கு நிச்​ச​யம் அழுத்​தத்​தைக் கொடுக்​கக்​கூடிய​வர்​களாக உள்​ளனர்.

அவர்​களுக்கு உறு​துணை​யாக கார்​பின் போஷ், ஷர்​துல் தாக்​குர், அஸ்​வனி குமார், மயங்க் மார்க்​கண்​டே, ரகு சர்மா உள்​ளனர். ஆல்​-ர​வுண்​டர்​களாக ஹர்​திக் பாண்​டி​யா, கார்​பின் போஷ், வில் ஜேக்​ஸ்,மயங்க் ராவத், நமன் திர், மிட்​செல் சாண்ட்​னர் ஆகியோர் அணிக்கு பலம் சேர்க்கின்றனர்.

அதே​நேரத்​தில் கொல்​கத்தா அணி​யும்மும்பை அணிக்கு சவால் அளிக்​கும் வகை​யில் பேட்​டிங் வரிசையை​யும், பந்​து​வீச்சு வரிசையை​யும் வைத்​துள்​ளது. பேட்​டிங்​கில் கேப்​டன் அஜிங்க்ய ரஹானே, ஃபின் ஆலன், டிம் ஷெய்​பர்ட், ரிங்கு சிங், மணீஷ் பாண்​டே, ரோவ்​மன் பவல், ரமன்​தீப் சிங், கேமரூன் கிரீன், ரச்​சின் ரவீந்​திரா ஆகியோர் உள்​ளனர்.

அதே​போல் பந்​து​வீச்​சில் வைபவ் அரோ​ரா, சுனில் நரேன், வருண் சக்​ர​வர்த்​தி, ரச்​சின் ரவீந்​தி​ரா, கேமரூன் கிரீன் ஆகியோர் எதிரணி பேட்​ஸ்​மேன்​களைஅச்​சுறுத்​தக் காத்​திருக்​கின்​றனர்.

மும்​பை​யில் போட்டி நடை​பெறு​வ​தால் மும்பை ரசிகர்​களின் ஏகோபித்த உற்​சாகத்​துக்கு இடையே மும்பை இந்​தி​யன்ஸ் அணி களமிறங்​கு​கிறது. அது​போல​வே, மும்​பைக்கு சவால் அளிக்​கும்விதத்​தில் களத்​தில் உயர்​மட்ட செயல்​திறனை வெளிப்​படுத்த கொல்​கத்தா வீரர்​களும் காத்​திருக்​கின்​றனர்.

சிஎஸ்கே போட்டிக்கு நாளை டிக்கெட் விற்பனை: சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் ஏப்ரல் 3-ம் தேதி சென்னையில் மோதும் ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை மார்ச் 30-ம் தேதி காலை நடைபெறவுள்ளது. டிக்கெட் விற்பனை மார்ச் 30-ம் தேதி காலை 10.15 மணிக்கு தொடங்கும். www.chennaisuperkings.com, www.district.in ஆகிய இணையதளங்கள் மற்றும் சிஎஸ்கே செல்போன் செயலியில் டிக்கெட்களை பெறலாம்.

SCROLL FOR NEXT