சென்னை: தசைநார் முறிவு காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது இந்த ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார். சிஎஸ்கே - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் கடந்த 14-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதின. இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தின் 17-வது ஓவரை சிஎஸ்கே வேகப்பந்து வீச்சாளரான கலீல் அகமது வீசிய போது வலது இடுப்பு பகுதியில் தசைநார் முறிவு ஏற்பட்டது. இதனால் அவர், களத்தில் இருந்து உடனடியாக வெளியேறினார். கலீல் அகமதுக்கு ஏற்பட்டுள்ளது இரண்டாம் நிலை தசைநார் முறிவு ஆகும்; இதிலிருந்து மீண்டு வர குறைந்தது 10-12 வாரங்கள் ஆகும். இதனால் ஐபிஎல் தொடரில் முழுமையாக கலீல் அகமது விலகியுள்ளார்.