விளையாட்டு

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆலோசகர் ஆனார் கெவின் பீட்டர்சன்

செய்திப்பிரிவு

லண்டன்: ஐசிசி ஒரு​நாள் போட்டி உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடர் அடுத்த ஆண்டு தென் ஆப்​பிரிக்​கா​வில் நடை​பெற உள்ளது. இதையொட்டி இங்​கிலாந்து ஒரு​நாள் போட்​டி, டி20 போட்டி அணி​களின் ஆலோ​சக​ராக முன்​னாள் கேப்​டன் கெவின் பீட்டர்சன் நியமிக்​கப்​பட்​டுள்​ளார்.

இதன் மூலம், கெவின் பீட்​டர்​சன் இங்​கிலாந்து அணி​யின் தலைமை பயிற்​சி​யாள​ரான பிரண்​டன் மெக்​கல்​லமின் உதவிப் பணி​யாளர்​கள் குழு​வில் இணைய உள்​ளார். இக்​குழு​வில் ஏற்​கெனவே மார்​கஸ் ட்ரெஸ்​கோ​திக், டிம் சவு​தி, ஜீத்​தன் படேல், சாரா டெய்​லர் ஆகியோர் உள்​ளனர். அடுத்த வாரம் இலங்​கைக்கு எதி​ராக நடை​பெற உள்ள தொடரிலிருந்து பீட்​டர்​சன் தனது புதிய பொறுப்பை ஏற்க உள்​ளார்.

கெவின் பீட்​டர்​சன் தென் ஆப்​பிரிக்​கா​வில் பிறந்து வளர்ந்​தவர் என்​ப​தால் அவரது அனுபவ​மும், உள்​ளூர் சூழல் குறித்த புரிதலும் கூடு​தல் பலம் சேர்க்​கக்​கூடும் என்​ப​தால் அவரை ஆலோ​சக​ராக நியமித்​துள்​ளது இங்​கிலாந்து கிரிக்​கெட் வாரி​யம்.

SCROLL FOR NEXT