விளையாட்டு

அபிஷேக் சர்மா மீது நம்பிக்கை வைக்​க வேண்டும்: கபில்தேவ் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்​திய அணி​யின் அதிரடி தொடக்க வீர​ராக உள்ள அபிஷேக் சர்மா, நடப்பு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் ரன் சேர்க்க முடி​யாமல் தடு​மாறி வரு​கிறார். இதனால் அவர் மீது அதிக அளவில் விமர்​சனங்​கள் எழுந்துள்​ளன.

இந்​நிலை​யில் முன்​னாள் கேப்​டன் கபில் தேவ் கூறியதாவது: அபிஷேக் சர்​மா, மிகச் சிறந்த வீரர் என்பதில் சந்​தேகமில்​லை. இறு​திப் போட்​டிக்கு அவரை அணி நிர்​வாகம் தேர்வு செய்​ய​வேண்​டும். இதற்கு முந்தைய போட்​டிகளில் அவரது செயல்​திறனைப் பார்த்து முடிவு செய்​யக்​கூ​டாது. அபிஷேக் சர்மா மீது அணி நிர்வாகம் நம்​பிக்கை வைக்​கவேண்​டும்.

          

நான் சிறப்​பாக விளை​யாட முடி​யும், நான் நிச்​ச​யம் உயர்மட்ட செயல்​திறனை வெளிப்​படுத்​து​வேன் என்று அபிஷேக் சர்​மா​வும் தன் மீது நம்​பிக்கை வைக்கவேண்டும். இந்​தத் தொடரில் இன்​னும் ஒரே ஒரு ஆட்​டம்​தான் உள்​ளது. அது​வும் இறு​திப் போட்​டி. இங்கிலாந்​துட​னான அரை இறுதி ஆட்​டம் சிறப்​பாக இருந்தது. இந்​தப் போட்டி கடைசி ஓவர் வரை கடின​மாகச் செல்​லும் என்று நான் எதிர்​பார்க்​கவில்​லை.

ஜஸ்​பிரீத் பும்ரா மிக​வும் சிறப்​பாக பந்​து​வீசுகிறார். இந்​தப் போட்​டி​யின் போது பந்​து​வீச்​சாளர்​களுக்கு அதிக அளவில் அழுத்​தம் இருந்​தது. இருந்​த​போதும் அவர், இறு​திக்​கட்ட ஓவர்​களில் மிக​வும் அபார​மாக பந்​து​வீசி​னார். இதனால்​தான் அவர், உலகின் மிகச்​சிறந்த பந்​து​வீச்​சாளர்​களில் ஒரு​வ​ராக போற்​றப்​படு​கிறார்.

உலகின் நம்​பர் ஒன் பந்​து​வீச்​சாளர் அவர்​தான். அனை​வரிட​மிருந்​தும் பாராட்​டும், மரி​யாதை​யும் பெற அவர் தகுதி​யானவர். அதே​போல் பேட்​டிங்​கில், சஞ்சு சாம்​சன் 42 பந்​துகளில் 89 ரன்​கள் குவித்​தது மிகச்​சிறப்​பு. அவர், ஒரு திறமை​யான கிரிக்​கெட் வீரர். கடந்த 2 போட்​டிகளி​லும் அவர் அபார​மாக விளை​யாடி​னார்​. இவ்​வாறு கபில்தேவ் கூறினார்.

SCROLL FOR NEXT