ஹம்பர்க்: ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் ஹம்பர்க் ஓபன் ஸ்குவாஷ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா 11-4, 11-5, 11-4 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் சாஸ்கியா பெயின்ஹார்டை வீழ்த்தினார். மற்றொரு இந்திய வீராங்கனையான தன்வி கன்னா 5-11, 7-11, 11-13 என்ற கணக்கில் அயர்லாந்தின் ஹன்னா கிரெய்க்கிடம் தோல்வி அடைந்தார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் வீர் சோட்ரானி 11-8, 11-9, 11-8 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் இவான் பெரேஸை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். அதேவேளையில் மற்றொரு இந்திய வீரரான வேலவன் செந்தில்குமார் 4-11, 9-11, 12-14 என்ற கணக்கில் ஜப்பானின் சுகியிடம் தோல்வி அடைந்தார்.