விளையாட்டு

ஆஷஸ் தொடரில் இருந்து ஜோப்ரா ஆர்ச்சர் விலகல்

செய்திப்பிரிவு

மெல்பர்ன்: இங்கிலாந்து கிரிக்​கெட் அணி ஆஸ்​திரேலி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து 5 ஆட்​டங்​கள் கொண்ட பாரம்​பரிமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளை​யாடி வரு​கிறது.

முதல் 3 போட்​டிகளி​லும் தோல்வி அடைந்த இங்​கிலாந்து அணி தொடரை 0-3 என இழந்​துள்​ளது. 4-வது போட்​டி​யான பாக்​ஸிங் டே டெஸ்ட் நாளை (26-ம் தேதி) மெல்​பர்ன் கிரிக்​கெட் மைதானத்​தில் தொடங்​கு​கிறது.

இந்த போட்​டிக்​கான விளை​யாடும் லெவனை இங்​கிலாந்து அணி நிர்​வாகம் நேற்று அறி​வித்​தது. இதில் முன்​னணி வேகப்​பந்து வீச்​சாள​ரான ஜோப்ரா ஆர்ச்​சர் காயம் காரண​மாக விலகி உள்​ளார். ஜனவரி 4-ம் தேதி தொடங்​கும் கடைசி டெஸ்ட் போட்​டி​யிலும் அவர், விளை​யாட​மாட்​டார் என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

ஜோப்ரா ஆர்ச்​சருக்கு பதிலாக விளை​யாடும் லெவனில் கஸ் அட்​கின்​சன் சேர்க்​கப்​பட்​டுள்​ளார். மேலும் பேட்​டிங்​கில் 3-வது இடத்​தில் களமிறங்​கும் ஆலி போப் நீக்​கப்​பட்டு அவருக்கு பதிலாக ஜேக்​கப் பெத்​தேல் சேர்க்​கப்​பட்​டுள்​ளார்.

அணி விவரம்: பென் ஸ்டோக்ஸ் (கேப்​டன்), ஸாக் கிராவ்​லி, பென் டக்​கெட், ஜேக்​கப் பெத்​தேல், ஜோ ரூட், ஹாரி புரூக், ஜேமி ஸ்மித், வில் ஜேக்​ஸ், கஸ் அட்​கின்​சன், பிரைடன்​ கார்​ஸ்​, ஜோஷ் டங்​.

SCROLL FOR NEXT