விளையாட்டு

4-வது சுற்றுக்கு ஜெஸ்ஸிகா பெகுலா தகுதி

செய்திப்பிரிவு

லண்​டன்: விம்​பிள்​டன் கிராண்ட்​ஸ்​லாம் டென்​னிஸ் போட்​டி​யின் மகளிர் ஒற்​றையர் பிரிவு 4-வது சுற்​றுக்கு அமெரிக்க வீராங்​கனை ஜெஸ்ஸிகா பெகுலா முன்​னேறி​யுள்​ளார்.

லண்​டனில் நேற்று நடை​பெற்ற மகளிர் ஒற்​றையர் பிரிவு 3-வது சுற்​றில் போட்​டித் தரவரிசை​யில் 4-ம் இடத்​தில் உள்ள ஜெஸ்​ஸிகா பெகுலா 4-6, 6-3, 6-1 என்ற செட் கணக்​கில் சக நாட்டு வீராங்கனையான இவா ஜோவிக்கை வீழ்த்​தி​னார்.

நேற்று முன்​தினம் நடை​பெற்ற மகளிர் ஒற்​றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்​டத்​தில் நடப்​புச் சாம்​பிய​னான போலந்​தின் இகாஸ்வியாடெக் தோல்வி கண்​டார். பிலிப்​பைன்​ஸின் அலெக்சாண்ட்ரா ஈலா 6-6, 6-2 என்ற செட் கணக்​கில் நடப்​புச் சாம்பியன் ஸ்வி​யாடெக்கை தோல்​வி​யுறச் செய்து வெளியேற்றினார்.

SCROLL FOR NEXT