விளையாட்டு

ஜப்​பான் ஓபன் பாட்​மிண்​டன்: கால் இறுதியில் கிடாம்பி ஸ்ரீகாந்த்

செய்திப்பிரிவு

குமமோட்டோ: ஜப்​பானின் குமமோட்டோ நகரில் ஜப்​பான் ஓபன் பாட்​மிண்​டன் தொடர் நடை​பெற்று வரு​கிறது. இதில் ஆட​வர் ஒற்​றையர் பிரிவு 2-வது சுற்​றில் இந்​தி​யாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், உல​கத் தரவரிசையில் 8-வது இடத்​தில் உள்ள ஜப்​பானின் கோடை நரோகாவை எதிர்த்து விளை​யாடினார்.

இந்த மோதலில் கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-15, 11-21, 21-18 என்ற செட் கணக்​கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்​றுக்கு முன்​னேறினார். மற்​றொரு இந்​திய வீரரான லக்‌ஷயா சென் 21-8, 21-14 என்ற நேர் செட் கணக்​கில் சீனாவின் டாங் டியான் யாவோவை வீழ்த்தி கால் இறுதி சுற்​றில் கால்​ப​தித்​தார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT