விளையாட்டு

ஐஎஸ்எல் கால்பந்து: சென்னை-கோவா அணிகள் இன்று மோதல்

செய்திப்பிரிவு

சென்னை: ஐஎஸ்​எல் கால்​பந்து லீக் போட்​டி​யில் இன்று சென்​னை​யின் எப்​சி, எப்சி கோவா அணி​கள் மோதவுள்ன.

சென்னை ஜவஹர்​லால் நேரு மைதானத்​தில் இன்று மாலை 5 மணிக்கு இந்த ஆட்​டம் நடை​பெறவுள்​ளது. நடப்பு சீசனில் கடந்த ஆட்​டத்​தில் சென்​னை​யின் எப்சி அணி 1-0 என்ற கணக்​கில் கேரள அணியை வீழ்த்​திய உற்​சாகத்​தில் இந்​தப் போட்​டி​யில் களமிறங்​கு​கிறது.

இந்த சீசனில் சென்​னை​யின் எப்சி அணிக்கு சென்​னை​யில் நடை​பெறும் முதல் ஆட்​ட​மாகும் இது. சென்​னை, கோவா அணி​கள் இது​வரை 30 போட்​டிகளில் மோதி​யுள்​ளன. இதில் சென்னை அணி 9 முறை​யும், கோவா அணி 18 முறை​யும் வென்​றுள்​ளன. 3 போட்​டிகள் டிரா​வில்​ முடிந்​துள்​ளன.

          
SCROLL FOR NEXT