விளையாட்டு

இஷான் கிஷன் விளாசலில் ஜார்க்கண்ட் அணி சாம்பியன்

செய்திப்பிரிவு

புனே: சையது முஸ்​டாக் அலி டி 20 கிரிக்​கெட் தொடரின் இறு​திப் போட்​டி​யில் இஷான் கிஷனின் அதிரடி சதத்​தால் ஜார்க்​கண்ட் அணி 69 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் ஹரி​யா​னாவை வீழ்த்தி சாம்​பியன் பட்​டம் வென்​றது.

புனே​வில் நேற்று நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் முதலில் பேட் செய்த ஜார்க்​கண்ட் அணி 20 ஓவர்​களில் 3 விக்​கெட்​கள் இழப்புக்கு 262 ரன்​கள் குவித்​தது. தொடக்க வீரரும் கேப்​ட​னு​மான இஷான் கிஷன் 49 பந்​துகளில், 10 சிக்​ஸர்​கள், 6 பவுண்​டரி​களு​டன் 101 ரன்​கள் விளாசி​னார். இதன் மூலம் சையது முஸ்​டாக் அலி தொடரின் இறு​திப் போட்​டி​யில் சதம் விளாசிய 2-வது வீரர் என்ற சாதனையை படைத்​தார்.

இதற்கு முன்​னர் கடந்த 2023-ம் ஆண்டு சீசனின் இறு​திப் பேட்​டி​யில் பரோடா அணிக்கு எதி​ராக பஞ்​சாப் அணி​யின் அன்​மோல்​பிரீத் சிங் 113 ரன்​கள் விளாசி​யிருந்​தார். இஷான் கிஷனுக்கு உறு​துணை​யாக விளை​யாடிய குமார் குஷாக்ரா 38 பந்​துகளில், 5 சிக்​ஸர்​கள், 8 பவுண்​டரி​களு​டன் 81 ரன்​கள் விளாசி​னார்.

இறு​திக்​கட்ட ஓவர்​களில் மட்​டையை சுழற்​றிய அனுகுல் ராய் 20 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 3 பவுண்​டரி​களு​டன் 40 ரன்​களும், ராபின் மின்ஸ் 14 பந்​துகளில், 3 சிக்​ஸர்​களு​டன் 31 ரன்​களும் விளாசி ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர். ஹரி​யானா அணி சார்​பில் சமந்த் ஜாகர் 4 ஓவர்​களை வீசி 62 ரன்​களை​யும், அன்​ஷுல் கம்​போஜ் 4 ஓவர்​களைவீசி 51 ரன்​களை​யும் தாரை வார்த்​திருந்​தனர்.

263 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த ஹரி​யானா அணி 18.3 ஓவர்​களில் 193 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக யஷ்வர்​தன் தலால் 53, சமந்த் ஜாகர் 38, நிஷாந்த் சிந்து 31 ரன்​கள் சேர்த்​தனர். ஜார்க்​கண்ட் அணி தரப்​பில் சுஷாந்த் மிஷ்​ரா, பால் கிருஷ்ணா ஆகியோர் தலா 3 விக்​கெட்​களை வீழ்த்​தினர். விகாஷ் சிங், அனுகுல் ராய் ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை கைப்​பற்​றினர். 69 ரன்​ வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற ஜார்க்​கண்ட் அணி சாம்பியன் பட்​டம் வென்​றது.

2 கேட்ச்​களை​யும், 101 ரன்​களை​யும் விளாசிய இஷான் கிஷன் ஆட்ட நாயக​னாக தேர்வா​னார். அனுகுல் ராய் தொடர் நாயகன் விருது வென்​றார். அவர், பேட்​டிங்​கில் 303 ரன்​களும் பந்​து ​வீச்​சில் 18 விக்​கெட்​களை​யும்​ வீழ்த்​தி​யிருந்​தா​ர்​.

SCROLL FOR NEXT