துபாய்: டி20 கிரிக்கெட் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவின் இஷான் கிஷன் 876 புள்ளிகளுடன், சகநாட்டைச் சேர்ந்த அபிஷேக் சர்மாவை (869) 2-வது இடத்துக்குத்தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார். அபிஷேக் சர்மா 12 மாதங்கள் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தியிருந்தார்.
இந்தியாவின் திலக் வர்மா 747 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் தொடர்கிறார். சூர்யகுமார் யாதவ் ஓர் இடத்தை இழந்து 8-வது இடத்தில் உள்ளார். பந்து வீச்சில் ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் முதலிடத்தில் உள்ளார். இந்தியாவின் வருண் சக்ரவர்த்தி 3-வது இடத்திலும், ஜஸ்பிரீத் பும்ரா 6-வது இடத்திலும் உள்ளனர். இவர்கள் இருவரும் தலா ஓர் இடத்தை இழந்துள்ளனர்.