விளையாட்டு

ஐபிஎல் போட்டிகளில் 3 ஆயிரம் ரன்கள் குவித்து இஷான் கிஷன் சாதனை

செய்திப்பிரிவு

பெங்களூரு: ஐபிஎல் கிரிக்​கெட் போட்​டிகளில் குறைந்த பந்​துகளில் 3 ஆயிரம் ரன்​கள் குவித்து இஷான் கிஷன் சாதனை புரிந்​தார்.

2026-ம் ஆண்டு ஐபிஎல் சீசன் நேற்று தொடங்​கியது. பெங்​களூரு சின்​ன​சாமி கிரிக்​கெட் மைதானத்​தில் நேற்று நடை​பெற்ற முதல் ஆட்​டத்​தில் நடப்பு சாம்​பியன் ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்​களூரு (ஆர்​சிபி) அணி​யும், 2016-ம் ஆண்டு சாம்​பிய​னான சன்​ரைசரிஸ் ஹைத​ரா​பாத் அணி​யும் மோதின.

          

முதலில் விளை​யாடிய ஹைத​ரா​பாத் அணி 20 ஓவர்​களில் 9 விக்​கெட் இழப்​புக்கு 201 ரன்​கள் எடுத்தது. ஹைத​ரா​பாத் அணி​யின் டிரா​விஸ் ஹெட் 11, அபிஷேக் சர்மா 7, நித்திஷ்கு​மார் ரெட்டி 1, ஹெயின்​ரிச் கிளாசன் 31, சலில் அரோரா 9, ஹர்ஷ் துபே 3, அனிக்​கெட் வர்மா 43 ரன்​கள் எடுத்​தனர். டேவிட் பெய்ன் 6 ரன்​களும், ஜெய்​தேவ் உனத்​கட் 4 ரன்​களும் எடுத்து ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர். இந்​தப் போட்​டி​யில் கேப்​டன் இஷான் கிஷன் அதிரடி​யாக விளை​யாடி 38 பந்​துகளில் 8 பவுண்​டரி​கள், 5 சிக்​ஸர்​களு​டன் 80 ரன்​கள் விளாசி​னார். இந்த ஆட்​டத்​தின்​போது அவர் ஐபிஎல் போட்​டிகளில் 3 ஆயிரம் ரன்​களைக் கடந்​தார். இதன்​மூலம் குறைந்த பந்​துகளில் 3 ஆயிரம் ரன்​களைக் கடந்த இந்​திய வீரர்​கள் பட்​டியலில் 6-வது இடத்​தைப் பிடித்​தார் கிஷன். அவர் 2,180 பந்​துகளில் 3 ஆயிரம் ரன்​களை எடுத்​துள்​ளார்.

இந்​தப் பட்​டியலில் முதல் இடத்​தில் ரிஷப் பந்த்​தும் ​(2,028 பந்​துகள்), 2-வது இடத்​தில் யூசுப் பதானும் ​(2,082 பந்​துகள்), 3-வது இடத்​தில் சூர்​யகு​மார் யாத​வும்​ (2,130 பந்​துகள்), 4-வது இடத்​தில் சுரேஷ் ரெய்​னா​வும் ​(2,135 பந்​துகள்), 5-வது இடத்​தில் எம்​.எஸ்​.தோனி​யும் ​(2,152 பந்​துகள்) உள்​ளனர். இதைத் தொடர்ந்து 202 ரன்​கள் எடுத்​தால் வெற்றி என்ற இலக்​குடன் பெங்​களூரு அணி விளை​யாடத்​ தொடங்​கியது.

SCROLL FOR NEXT