விளையாட்டு

2-2 என்ற கோல் கணக்கில் நியூஸிலாந்துக்கு எதிராக போராடி டிரா செய்தது ஈரான் | FIFA WC 2026

செய்திப்பிரிவு

லாஸ்ஏஞ்சல்ஸ்: பிஃபா உலகக் கோப்பை கால்​பந்து தொடரில் அமெரிக்​கா​வில் உள்ள லாஸ்​ஏஞ்​சல்ஸ் நகரில் உள்ள சோபி மைதானத்​தில் நேற்று ‘ஜி’ பிரி​வில் நடை​பெற்ற லீக் ஆட்​டத்​தில் ஈரான் - நியூஸிலாந்து அணி​கள் மோதின. தரவரிசை​யில் 20-வது இடத்​தில் உள்ள ஈரான் அணிக்கு தொடக்​கம் முதலே கடும் சவால் அளித்​தது 85-வது இடத்​தில் உள்ள நியூஸிலாந்து அணி.

ஆட்​டத்​தின் 7-வது நிமிடத்​தில் பெனால்டி பகு​திக்​குள் வெளி​யில் சர்ப்​ரீத் சிங்​குக்கு பந்தை தட்​டி​விட்டு முன்​னேறி​னார் நியூஸிலாந்து அணி​யின் எலிஜா ஜஸ்ட். அதை பெற்ற சர்ப்​ரீத் சிங், பாக்ஸ் பகு​திக்​குள் நின்ற கிறிஸ்​வுட்​டுக்கு அனுப்​பி​னார். அவர், பந்தை நெஞ்​சால் கட்​டுப்​படுத்தி அரு​கில் நின்ற ஈரான் அணி​யின் சமன் கோடாஸ் சுதா​ரிப்​ப​தற்​குள் எலிஜா ஜஸ்​டுக்கு தட்​டி​விட்​டார். எலிஜா ஜஸ்ட் வலு​வாக அடித்த ஷாட் கோல் வலையை துளைத்தது. இதனால் நியூஸிலாந்து அணி 1-0 என முன்​னிலை பெற்​றது.

32-வது நிமிடத்​தில் ஈரான் பதிலடி கொடுத்​தது. வலது பக்​கத்​திலிருந்து மைதானத்​தின் உட்​பகு​தியை நோக்கி நகர்ந்த ரமீன் ரெஸா​யி​யான், கோடோஸிற்கு ஒரு பாஸ் கொடுத்​தார். அதை வாங்​கிய கோடோஸ் ஒரே தொடு​தலில் பந்தை பெனால்டி பாக்​ஸுக்​குள் அனுப்​பி​னார். அங்கே பந்​தைப் பெற்ற ஷாரியர் மொகன்லு நியூஸிலாந்து டிஃபென்​டர் மைக்​கேல் பாக்​ஸாலை ஏமாற்​றித் திரும்ப முயன்​றார்.

அப்​போது அவர், கீழே சரிந்​த​படி அடித்த ஷாட்​டை, அவரை மிக நெருக்​க​மாகக் கண்​காணித்​துக் கொண்​டிருந்த சென்​டர்​-பேக் வீரர் தடுத்து நிறுத்​தி​னார். அப்​போது அரு​கில் வேக​மாக ஓடி வந்த ரெஸா​யி​யான் கண்​ணிமைக்​கும் நேரத்​தில் பந்தை கோல் வலைக்​குள் திணித்​தார். இதனால் ஆட்​டம் 1-1 என்ற கோல் கணக்​கில் சமநிலையை எட்​டியது.

54-வது நிமிடத்​தில் சர்ப்​ரீத் சிங்​கிடம் இருந்து பந்தை பெற்ற எலிஜா ஜஸ்ட் விரை​வாக கடத்​திச் சென்று பாக்ஸ் பகு​திக்​குள் நின்ற கிறிஸ் வுட்​டுக்கு தட்​டி​விட்டு வலதுபுற​மாக ஓடிச் சென்​றார். இதன் பின்​னர் கிறிஸ்​வுட், எலிஜா ஜஸ்ட்​டுக்கு பந்தை பாஸ் செய்ய அவர், எதிரணி​யின் டிஃபென்​டரை கடந்து அற்​புத​மாக கோல் அடித்​தார்.

இதனால் நியூஸிலாந்து அணி 2-1 என்றகோல் கணக்​கில் முன்​னிலை பெற்​றது. 64-வது நிமிடத்​தில் ஈரான் வீரர் ரெஸா​யி​யான் அடித்த கிராஸை பெற்ற முகமது மொஹெப்பி தலை​யால் முட்டி கோல் அடித்​தார். இதனால் ஆட்​டம் 2-2 என்ற சமநிலையை எட்​டியது. இறு​திக்​கட்ட நிமிடங்​களில் இரு அணி​களுக்​கும் கோல் அணிக்க வாய்ப்​பு​கள் கிடைத்​தன. ஆனால் அதற்கு பலன் கிடைக்​க​வில்​லை. முடி​வில் ஆட்​டம் 2-2 என்ற கோல் கணக்​கில் டிரா​வில் முடிவடைந்​தது. இரு அணி​களுக்​கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

எட்​டாக்​க​னி​யான வெற்றி

3-வது முறை​யாக உலகக் கோப்பை தொடரில் விளை​யாடி வரும் நியூஸிலாந்து அணி இது​வரை ஒரு வெற்​றிகூட பெற​வில்​லை. ஈரான் அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் அந்த அணி இரு முறை முன்​னிலை​யில் இருந்த போதி​லும் 64-வது நிமிடத்​தில் ஈரானின் முகமது மொஹெப்பி அடித்த கோல் காரண​மாக ஆட்​டம் டிரா​வில் முடிவடைந்​தது. இதனால் நியூஸிலாந்து அணி​யின் வரலாற்று வெற்றி தடைபட்​டது. அந்த அணி இது​வரை 7 ஆட்​டங்​களில்​ விளை​யாடி 4 டிரா, 3 தோல்வி​களை பதிவு செய்​துள்​ளது.

SCROLL FOR NEXT