விளையாட்டு

ஹாட்ரிக் வெற்றி பெறுமா சிஎஸ்கே? - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உடன் இன்று மோதல்

செய்திப்பிரிவு

ஹைதராபாத்: ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு ஹைத​ரா​பாத்​தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் 5 முறை சாம்பியனான சிஎஸ்கே அணி, 2016-ம் ஆண்டு சாம்பியனான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி​யுடன் மோதுகிறது.

இஷான் கிஷன் தலை​மையி​லான சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி 5 ஆட்​டங்​களில் விளை​யாடி 2 வெற்​றி, 3 தோல்வி​களு​டன் 4 புள்​ளி​கள் பெற்று பட்​டியலில் 4-வது இடத்​தில் உள்​ளது. முதல் நான்கு போட்​டிகளில் மூன்​றில் தோல்​வியடைந்த நிலை​யில் அந்த அணி கடைசி​யாக தனது சொந்த மைதானத்​தில் கம்​பீர​மாக மீண்டு வந்​தது.

அந்த ஆட்​டத்​தில் அறி​முக வீரர்​களாக களமிறங்​கிய இளம் வேகப்​பந்து வீச்​சாளர்​களான பிரஃபுல் ஹிங்​கே, ஷகிப் ஹுசைன் ஆகியோர் அபார​மாக செயல்​பட்டு இருந்​தனர். இவர்​கள் இரு​வரின் வருகை அணி​யின் நம்​பிக்​கையை அதி​கரிக்​கச் செய்​துள்​ளது. மேலும் அணி​யும் சமநிலையை அடைந்​துள்​ளது. ராஜஸ்​தான் அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் ஹைத​ரா​பாத் அணி​யில் அனுபவம் வாய்ந்த வீரர்​களான ஹர்​ஷல் படேல், ஜெய்​தேவ் உனத்​கட் ஆகியோ​ருக்​குப் பதிலாகக் களமிறக்​கப்​பட்ட பிரஃபுல் ஹிங்​கே, ஷகிப் ஹுசைன் ஆகியோர் ஆட்​டம் தொடங்​கியதுமே மிகப்​பெரிய தாக்​கத்தை ஏற்​படுத்​தினர்.

முதல் மூன்று ஓவர்​களுக்​குள்​ளேயே ராஜஸ்​தான் ராயல்ஸ் அணியை 9 ரன்​களுக்கு 5 விக்​கெட் என்ற நிலைக்​குச் சரியச் செய்து நடப்பு சீசனில் அந்த அணி​யின் முதல் தோல்விக்​குக் காரண​மாக அமைந்​தனர். விதர்​பாவைச் சேர்ந்த 24 வயதான பிரஃபுல் ஹிங்​கே, ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி​யின் முன்​வரிசை வீரர்​களான வைபவ் சூர்​ய​வன்​ஷி, துருவ் ஜுரல், லுவான்​-டிரே பிரிட்​டோரியஸ், கேப்​டன் ரியான் பராக் ஆகியோரைத் தனது முதல் இரண்டு ஓவர்​களி​லேயே வீழ்த்தி அந்த அணியை நிலைகுலை​யச் செய்​தார்.

அவர் தனது 4 ஓவர்​களில் 34 ரன்​கள் மட்​டுமே விட்​டுக்​கொடுத்து 4 விக்​கெட்​டு​களைக் கைப்​பற்றி அசத்தியிருந்தார். பந்தை சரி​யான லெந்​தில் பிட்ச் செய்​து, அதிலிருந்து கூடு​தல் பவுன்ஸ் வரவழைத்து ராஜஸ்​தான் பேட்​டர்​களை திணறடித்​திருந்​தார் பிரஃபுல் ஹிங்​கே. அவருக்கு ஈடு​கொடுக்​கும் வகை​யில், இதற்கு முன்​னர் கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் அணி​யால் கவனிக்​கப்​ப​டா​மல் விடப்​பட்ட பிஹாரைச் சேர்ந்த 21 வயதான ஷகிப் ஹுசைனும் அபார​மாகப் பந்​து​வீசி மிரட்​டி​யிருந்​தார்.

நடு ஓவர்​களில் மிக​வும் சாதுர்​ய​மாக பந்​தின் வேகத்​தைக் குறைத்​தும், திசையை மாற்​றி​யும் வீசிய ஹுசைனும், 4 விக்​கெட்​டு​களை வீழ்த்தி அசத்​தி​னார். இதன் விளை​வாக 216 ரன்​கள் என்ற இலக்கை துரத்​திய ராஜஸ்​தான் அணி 159 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​திருந்​தது. இந்த இளம் ஜோடி​யின் வரு​கை, நடப்பு சீசனின் தொடக்​கத்​தில் பின்​னடை​வாகக் கருதப்​பட்ட ஹைத​ரா​பாத் அணி​யின் வேகப்​பந்து வீச்சை புதிய உயரத்​துக்கு கொண்டு சென்​றுள்​ளது.

மேலும், அபிஷேக் சர்​மா, டிரா​விஸ் ஹெட், இஷான் கிஷன், ஹென்​ரிச் கிளாசன் போன்ற அதிரடி பேட்​டர்​களை மட்​டுமே அதி​கம் நம்​பி​யிருந்த அந்த அணிக்​கு, இவர்​களின் எழுச்சி சிறந்த சமநிலையை கொடுத்​துள்​ளது. ருது​ராஜ் கெய்க்​வாட் தலை​மையி​லான சிஎஸ்கே அணி தொடர்ச்​சி​யாக 3 ஆட்​டங்​களில் தோல்வி​களை சந்​தித்த போதி​லும் அதில் இருந்து மீண்டு வந்து அடுத்​தடுத்து 2 வெற்​றிகளை பெற்​றுள்​ளது.

தொடக்க வீர​ரான சஞ்சு சாம்​சன் பார்​முக்கு திரும்​பி​யிருப்​பது அணி​யின் பலத்தை அதி​கரித்​துள்​ளது. டெல்லி அணிக்கு எதி​ராக சதம் விளாசிய சஞ்சு சாம்​சன், கடைசி​யாக கொல்​கத்தா அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் 48 ரன்​கள் எடுத்​திருந்​தார். அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்​டம் வெளிப்​படக்​கூடும்.

மற்​றொரு தொடக்க வீர​ரான ருது​ராஜ் கெய்க்​வாட்​டின் பார்ம் அணி​யின் கவலையை அதி​கரிக்​கச் செய்​துள்​ளது. 5 ஆட்​டங்​களில் அவர், ஒட்​டுமொத்​த​மாக 12.60 சராசரி​யுடன் 63 ரன்​களே எடுத்​துள்​ளார். அதி​கபட்ச ஸ்கோர் 28 ஆக உள்​ளது. ரன்​கள் சேர்க்க தடு​மாறி வரும் ருது​ராஜ் கெய்க்​வாட் இன்​றைய ஆட்​டத்​தில் பேட்​டிங் வரிசை​யில் 3-வது இடத்​துக்கு தள்​ளப்​படக்​கூடும்.

அவருக்கு பதிலாக இளம் வீர​ரான ஆயுஷ் மாத்ரே தொடக்க வீர​ராக களமிறக்​கப்பட வாய்ப்பு உள்​ளது. நடப்பு தொடரில் ஆயுஷ் மாத்ரே 5 ஆட்​டங்​களில் 2 அரை சதங்​களு​டன் 171 ரன்​கள் சேர்த்​துள்​ளார். அவரது ஸ்டிரைக் ரேட் 171 ஆக இருக்​கிறது. நடு​வரிசை​யில் சர்ஃப​ராஸ் கான், டெவால்ட் பிரே​விஸ், ஷிவம் துபே ஆகியோர் நம்​பிக்கை அளிக்​கக்​கூடிய​வர்​களாக திகழ்​கின்​றனர்.

பந்​து​வீச்​சில் தொடை பகு​தி​யில் ஏற்​பட்ட தசை பிடிப்பு காரண​மாக கலீல் அகமது வில​கி​யுள்​ளார். இது சற்று பாதிப்பை ஏற்​படுத்​தக்​கூடும். எனினும் அவரது இடத்தை முகேஷ் சவுத்ரி அல்​லது ராமகிருஷ்ணா கோஷ் ஆகியோர் நிரப்​பக்​கூடும். கடந்த ஆட்​டத்​தில் நூர் அகமது சிறப்​பாக பந்​து​வீசி 3 விக்​கெட்​களை வீழ்த்​தி​யிருந்​தார். அவருடன் அகீல் ஹோசைனும் நம்​பிக்கை அளிக்​கக்​கூடிய​வ​ராக தி​கழ்​கிறார். இந்த சுழல் கூட்​டணி ஹைத​ரா​பாத்​ அணி​யின்​ பேட்​டிங்​ வரிசைக்​கு அழுத்​தம்​ கொடுக்​க ​முயற்​சிக்கக்கூடும்.

SCROLL FOR NEXT