விளையாட்டு

IPL 2026 | முதற்கட்ட அட்டவணை வெளியீடு: முதல் ஆட்டத்தில் ஆர்சிபி - சன்ரைசர்ஸ் பலப்பரீட்சை!

வேட்டையன்

மும்பை: ஐபிஎல் 2026-ம் ஆண்டுக்கான கிரிக்கெட் சீசனின் முதற்கட்ட அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த சீசனுக்கான போட்டிகள் வரும் 28-ம் தேதி முதல் மே 31 வரை நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சீசனில் 84 லீக் போட்டிகள், அதை தொடர்ந்து பிளே-ஆஃப் சுற்று மற்றும் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. 10 அணிகள் பங்கேற்று விளையாடும் இந்த சீசனின் முதற்கட்ட ஆட்ட அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. எஞ்சிய ஆட்டங்களுக்கான அட்டவணை தமிழகம், கேரளம், புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களின் தேர்தல் அட்டவணை அறிவிப்புக்கு ஏற்ப திட்டமிடப்படும் என தகவல்.

          

வரும் 28-ம் தேதி அன்று இந்த சீசனில் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆர்சிபி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை மேற்கொள்கின்றன. இந்த ஆட்டம் பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.

ஐபிஎல் 2026: முதற்கட்ட அட்டவணை…

>மார்ச் 28: ஆர்சிபி vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - பெங்களூரு

>மார்ச் 29: மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை

>மார்ச் 30: ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - கவுஹாத்தி

>மார்ச் 31: பஞ்சாப் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - முல்லான்பூர்

>ஏப்.1: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs டெல்லி கேப்பிடல்ஸ் - லக்னோ

>ஏப்.2: கொல்கத்தா vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - கொல்கத்தா

>ஏப்.3: சிஎஸ்கே vs பஞ்சாப் கிங்ஸ் - சென்னை

>ஏப்.4: டெல்லி vs மும்பை - டெல்லி

>ஏப்.4: குஜராத் vs ராஜஸ்தான் - அகமதாபாத்

>ஏப்.5: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs லக்னோ - ஹைதராபாத்

>ஏப்.6: கொல்கத்தா vs பஞ்சாப் - கொல்கத்தா

>ஏப்.7: ராஜஸ்தான் vs மும்பை - கவுஹாத்தி

>ஏப்.8: டெல்லி vs குஜராத் - டெல்லி

>ஏப்.9: கொல்கத்தா vs லக்னோ - கொல்கத்தா

>ஏப்.10: ராஜஸ்தான் vs பெங்களூரு - கவுஹாத்தி

>ஏப்.11: பஞ்சாப் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - முல்லான்பூர்

>ஏப்.11: சிஎஸ்கே vs டெல்லி - சென்னை

>ஏப்.12: லக்னோ vs குஜராத் - லக்னோ

>ஏப்.12: மும்பை vs ஆர்சிபி - மும்பை

SCROLL FOR NEXT