விளையாட்டு

ஐபிஎல் தொடரின் முதற்கட்ட அட்டவணை நாளை வெளியீடு

செய்திப்பிரிவு

மும்பை: ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் போட்​டிகள் வரும் 28-ம் தேதி முதல் மே 31 வரை இந்​தி​யா​வின் பல்​வேறு நகரங்​களில் நடை​பெற உள்​ளன. இதற்​கிடையே தமிழ்​நாடு, கேரளா, அசாம், புதுச்​சேரி, மேற்கு வங்​கம் ஆகிய 5 மாநில சட்​டப்​பேரவை தேர்​தல் நடை​பெற உள்​ள​தால் ஐபிஎல் தொடருக்​கான அட்​ட​வணை வெளி​யிடு​வ​தில் தாமதம் நிலவி வரு​கிறது.

இந்​நிலை​யில் 19-வது சீசனுக்​கான ஐபிஎல் போட்டி முதற்கட்ட அட்​ட​வணை நாளை (12-ம் தேதி) வெளி​யிடப்​படும் என பிசிசிஐ செய​லா​ளர் தேவஜித் சைகியா தெரிவித்​துள்​ளார். இது தொடர்​பாக அவர் கூறும்​போது, ” ஐபிஎல் போட்டி அட்​டவணையை 12-ம் தேதி அறிவிக்க திட்ட​மிட்​டுள்​ளோம். முதற்​கட்​ட​மாக ஐபிஎல் போட்​டிகளின் முதல் 20 நாட்​களுக்கான அட்​ட​வணையை அறிவிக்க உள்ளோம்” என்​றார்.

          

2026-ம் ஆண்டு சீசனுக்​காக பல்​வேறு அணி​கள் தங்​களது பயிற்​சியை ஏற்​கெனவே தொடங்​கி​விட்​டன. 5 முறை சாம்பிய​னான சென்னை சூப்​பர் கிங்ஸ் அணி கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் நாவலூரில் உள்ள உயர் திறன் மையத்​தில் தீவிர பயிற்​சி​யில் ஈடு​பட்​டுள்​ளது. இதில் எம்.எஸ்​.தோனி, கேப்​டன் ருது​ராஜ் கெய்க்​வாட், ஆயுஷ் மாத்ரே உள்​ளிட்ட பல வீரர்​கள் பங்​கேற்​றுள்​ளனர்.

நடப்பு சாம்​பிய​னான ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்​களூரு அணி கடந்த பிப்​ர​வரி 10-ம் தேதி மும்பை டி.ஒய்​.​பாட்​டீல் மைதானத்​தில் சிறிய அளவில் பயிற்சி முகாமை நடத்தியிருந்​தது. 2022-ம் ஆண்டு சாம்​பிய​னான குஜ​ராத் டைட்​டன்ஸ் அணி ராஜஸ்​தானின் நத்​வா​ரா​வில் உள்ள மிராஜ் சர்​வ​தேச மைதானத்​தில் இரு பயிற்சி அமர்​வு​களை நடத்தி உள்​ளது.

பஞ்​சாப் கிங்ஸ் அணி கடந்த பிப்​ர​வரி மாதம் அபு​தாபி​யில் சிறப்பு பயிற்சி முகாமை நடத்​தி​யது. தொடர்ந்து தற்​போது அந்த அணி தரம்​சாலா​வில் பயிற்சி மேற்​கொண்டு வருகிறது. 2016-ம் ஆண்டு சாம்​பிய​னான சன் ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி கடந்த மார்ச் 1-ம் தேதி உள்​ளூர் வீரர்களை கொண்டு பயிற்சி முகாமை நடத்​தி​யது.

ஐந்து முறை சாம்​பியன்​களான மும்பை இந்​தி​யன்ஸ் அணி​யும் வரவிருக்​கும் சீசனுக்​கான தங்​களின் பயிற்​சியை தொடங்​கி​யுள்​ளது. 2008-ம் ஆண்டு சாம்​பிய​னான ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி வரும் 15-ம் தேதி முதல் ஜெய்ப்​பூரில் பயிற்​சியை தொடங்​கக்​கூடும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

3 முறை சாம்​பிய​னான கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் அணி வரும் 18-ம் தேதி பயிற்​சியை தொடங்​கு​கிறது. டெல்லி கேபிடல்ஸ் அணி ஹைத​ரா​பாத்​தில் பயிற்சி முகாமை நடத்​தி​யது. அந்த அணி டெல்​லியிலும் பயிற்சி மு​காமை நடத்த திட்​ட​மிட்​டுள்​ளது. லக்னோ சூப்​பர்​ ஜெயண்ட்​ஸ்​ அணி​யானது லக்​னோ நகரில்​ பயிற்​சி அமர்​வை நடத்தியுள்​ளது.

SCROLL FOR NEXT