விளையாட்டு

பஞ்சாப் கிங்ஸுடன் இன்று பலப்பரீட்சை: சொந்த மண்ணில் வெற்றி பெறும் முனைப்பில் சிஎஸ்கே

பெ.மாரிமுத்து

சென்னை: ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்​பாக்​கம் எம்​.ஏ.சிதம்​பரம் மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் 5 முறை சாம்​பிய​னான சிஎஸ்கே, பஞ்​சாப் கிங்ஸ் அணி​யுடன் மோதுகிறது.

ருதுராஜ் கெய்க்வாட் தலை​மையி​லான சிஎஸ்கே அணி தனது முதல் ஆட்​டத்​தில் ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி​யிடம் 8 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி கண்​டிருந்​தது. டாப் ஆர்​டர் பேட்​டிங்​கில் சஞ்சு சாம்​சன், ருது​ராஜ் கெய்க்​வாட், ஆயுஷ் மாத்ரே ஆகியோர் தாக்​கத்தை ஏற்​படுத்​தத் தவறினர். நடு​வரிசையில் சர்ஃப​ராஸ் கான், ஷிவம் துபே, கார்த்​திக் சர்மா ஆகியோ​ரும் ஏமாற்​றம் அளித்​தனர்.

          

8-வது வீர​ராக களமிறங்​கிய ஜேமி ஓவர்​டன் 43 ரன்​கள் சேர்த்​ததன் காரண​மாக சிஎஸ்கே அணி​யால் அந்த ஆட்​டத்​தில் 100 ரன்​களை கடக்க முடிந்​தது. பந்​து​வீச்​சிலும் சிஎஸ்கே அணி உயர்​மட்ட செயல் திறனை வெளிப்​படுத்​தத் தவறியது. ராஜஸ்​தான் அணி​யின் 15 வயதான வைபவ் சூர்​ய​வன்ஷி தனது தாக்​குதல் ஆட்​டத்​தால் மேட் ஹென்​றி, கலீல் அகமது, நூர் அகமது, அன்​ஷுல் கம்​போஜ், ஜேமி ஓவர்​டன் ஆகியோரை உள்​ளடக்​கிய ஒட்​டுமொத்த சிஎஸ்கே அணி​யின் பந்​து​வீச்​சை​யும் கடும் சிதைவுக்கு உட்​படுத்​தி​யிருந்​தார்.

இதனால் இன்​றைய ஆட்​டத்​தில் சிஎஸ்கே அணி சொந்த மண்​ணில் பேட்​டிங், பந்​து​வீச்சு என அனைத்து துறை​யிலும் மேம்​பட்ட திறனை வெளிப்​படுத்​தி​னால் மட்​டுமே வெற்​றியை வசப்​படுத்த முடி​யும். சேப்​பாக்​கம் ஆடு​களம் கடந்த மாதம் நிறைவடைந்த டி 20 உலகக் கோப்பை தொடரின் போது முற்​றி​லும் ரன்​கு​விப்​புக்கு சாதக​மாக இருந்​தது. அதேவளை​யில் சுழற்​பந்து வீச்​சுக்கு பெரிய அளவில் ஒத்​துழைக்​க​வில்​லை. இதே நிலையே தற்​போதும் தொடரக்​கூடும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

முதல் போட்​டி​யில் தோனி, டெவால்ட் பிரே​விஸ் ஆகியோர் காயம் காரண​மாக களமிறங்​காதது ஆட்​டத்​தின் செயல்​திறனிலும், முடி​விலும் பிர​திபலித்​தது. தோனி 2 வாரங்​களுக்கு விளை​யாட முடி​யாது என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. அதேவேளை​யில் டெவால்ட் பிரே​விஸின் காயத்​தின் தன்மை குறித்து இன்​னும் தெளிவுப்​படுத்​தப்​பட​வில்​லை. ஒரு​வேளை அவர், இன்​றைய ஆட்​டத்​தில் களமிறங்​கி​னால் அது சிஎஸ்கே அணிக்கு பலமாக இருக்​கும்.

ஸ்ரேயஸ் ஐயர் தலை​மையி​லான பஞ்​சாப் கிங்ஸ் அணி தனது முதல் ஆட்​டத்​தில் 2022-ம் ஆண்டு சாம்​பிய​னான குஜ​ராத் டைட்​டன்ஸ் அணியை வீழ்த்​தி​யிருந்​தது. அந்த ஆட்​டத்​தில் விஜயகு​மார் வைஷாக் ஷாட்​பால் உத்​தி​யில் சிறப்​பாக செயல்​பட்​டிருந்​தார். யுவேந்​திர சாஹல், மார்கோ யான்​சன் ஆகியோ​ரும் உயர்​மட்ட செயல் திறனை வெளிப்​படுத்தி எதிரணி​யின் ரன்​கு​விப்பை கட்​டுப்​படுத்​தி​யிருந்​தனர்.

பேட்​டிங்​கில் ஆஸ்​திரேலி​யா​வின் இளம் வீர​ரான கூப்​பர் கானொலி 44 பந்​துகளில் 72 ரன்​களை விளாசி தனிப்​பட்ட பேட்​ஸ்​மே​னாக போராடி அணி​யின் வெற்​றி​யில் முக்​கிய பங்கு வகித்​திருந்​தார். அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த செயல்​திறன் வெளிப்​படக்​கூடும். தொடக்க வீர​ரான பிரியன்ஸ் ஆர்யா கடந்த ஆண்டு சிஎஸ்​கேவுக்கு எதி​ராக 42 பந்​துகளில் 103 ரன்​கள் விளாசி மிரட்​டி​யிருந்​தார்.

இம்​முறை​யும் அவர், சிஎஸ்கே பந்​து​வீச்​சாளர்​களுக்கு அழுத்​தம் கொடுக்க முயற்​சிக்​கக்​கூடும். கடந்த ஆட்​டத்​தில் பெரிய அளவில் சோபிக்​காத பிரப்​சிம்​ரன் சிங், ஸ்ரேயஸ் ஐயர், நேகல் வதே​ரா, ஷசாங்க் சிங், மார்​கஸ் ஸ்டோனிஸ் ஆகியோர் மட்​டையை சுழற்​று​வ​தில் கூடு​தல் கவனம் செலுத்​தக்​கூடும். பின்​வரிசை​யில் மார்கோ யான்​சன் தனது தாக்​குதல் ஆட்​டத்​தால் பலம் சேர்க்​கக்​கூடும்.

சேப்​பாக்​கில் இது​வரை..

சேப்​பாக்​கம் எம்​.ஏ. சிதம்​பரம் மைதானத்​தில் இது​வரை ஐபிஎல் தொடரில் 146 ஆட்​டங்​கள் நடை​பெற்​றுள்​ளன. இதில் 74 ஆட்​டங்​களில் முதலில் பேட் செய்த அணி வெற்றி கண்​டுள்​ளது. 70 ஆட்​டங்​களில்​ இலக்​கை துரத்​தி​ய அணி வெற்​றி பெற்​றுள்ளது.

SCROLL FOR NEXT