விளையாட்டு

IPL 2026 Auction: 10 அணிகளிடம் கைவசம் உள்ள தொகை எவ்வளவு?

வேட்டையன்

சென்னை: எதிர்வரும் ஐபிஎல் 2026 சீசனுக்கான மினி ஏலம் நாளை (டிச.16) அபுதாபியில் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 350 வீரர்கள் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில், வீரர்களை தக்க வைத்தது, விடுவித்தது, டிரேட் செய்தது போக 10 ஐபிஎல் அணிகளின் கைவசம் உள்ள தொகை எவ்வளவு என்பதை பார்ப்போம்.

இந்த ஏலத்துக்கு முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இடையிலான டிரேடிங் அதிகளவில் கவனம் ஈர்த்தது. சிஎஸ்கே ஜடேஜாவையும், ராஜஸ்தான் ராயல்ஸ் சஞ்சு சாம்சனையும் டிரேடிங் முறையில் மாற்றிக் கொண்டன.

அடுத்த சீசனுக்கான ஏலம் நாளை நடைபெற உள்ள நிலையில் 10 அணிகளின் கைவசம் உள்ள தொகை எவ்வளவு என்பதை பார்ப்போம்.

  • டெல்லி கேபிடல்ஸ் - ரூ.21.80 கோடி உடன் ஏலத்தில் பங்கேற்கிறது. மொத்தம் 8 வீரர்களை இந்த ஏலத்தில் டெல்லி அணி ஒப்பந்தம் செய்யலாம்.

  • குஜராத் டைட்டன்ஸ் - ரூ.12.90 கோடியை கைவசம் கொண்டுள்ளது. மொத்தம் 5 வீரர்களை ஏலத்தில் ஒப்பந்தம் செய்யலாம்.

  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ரூ.64.30 கோடி உடன் ஏலத்தில் அதிக தொகையை கொண்ட அணியாக கொல்கத்தா பங்கேற்கிறது. ஏலத்தில் மொத்தமாக 13 வீரர்கள் வரை அந்த ஒப்பந்தம் செய்யலாம்.

  • லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - ரூ.22.95 கோடியை கொண்டுள்ள லக்னோ அணி, 6 வீரர்களை ஏலத்தில் ஒப்பந்தம் செய்யலாம்.

  • மும்பை இந்தியன்ஸ் - ரூ.2.75 கோடி உடன் மும்பை இந்தியன்ஸ் இந்த ஏலத்தில் கலந்து கொள்கிறது. 5 வீரர்கள் வரை அந்த அணி இதில் ஒப்பந்தம் செய்யலாம்.

  • பஞ்சாப் கிங்ஸ் - மினி ஏலத்தில் பஞ்சாப் அணிக்கு 4 வீரர்களை ஒப்பந்தம் செய்யலாம். அந்த அணியின் வசம் ரூ.11.50 கோடி உள்ளது.

  • ராஜஸ்தான் ராயல்ஸ் - முதல் ஐபிஎல் சீசனில் பட்டம் வென்ற ராஜஸ்தான் அணி ரூ.16.05 கோடி உடன் ஏலத்தில் பங்கேற்கிறது. மொத்தம் 9 வீரர்களை அந்த அணி ஒப்பந்தம் செய்யலாம்.

  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 2025 சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற ஆர்சிபி அணி இந்த ஏலத்தில் 8 வீரர்களை ஒப்பந்தம் செய்யலாம். அந்த அணி ரூ.16.40 கோடியை கொண்டுள்ளது.

  • சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ரூ.25.50 கோடி உடன் ஏலத்தில் பங்கேற்கிறது ஹைதராபாத் அணி. மொத்தம் 10 வீரர்கள் வரை அந்த அணி ஒப்பந்தம் செய்யலாம்.

  • சென்னை சூப்பர் கிங்ஸ் - ரூ.43.40 கோடி உடன் ஏலத்தில் பங்கேற்கிறது. மொத்தம் 9 வீரர்களை இந்த ஏலத்தில் சிஎஸ்கே ஒப்பந்தம் செய்யலாம்.

SCROLL FOR NEXT