விளையாட்டு

பள்ளிகள் இடையிலான கால்பந்து: ஜிஎம்டிடிவி அணி சாம்பியன்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை கால்​பந்து சங்​கம் ​(சிஎப்ஏ) - திலக் மோதி யுசி பள்​ளி​களுக்கு இடையி​லான கால்பந்துப் போட்டி​யில் ஜிஎம்​டிடிவி மேல்​நிலைப்​பள்ளி அணி கோப்பையை வென்​றது.

இந்​தப் போட்டி சென்னை கண்​ணப்​பர் திடலில் நேற்று நடை​பெற்​றது. இறு​திப் போட்​டி​யில் ஜிஎம்​டிடிவி மேல்​நிலைப்​பள்ளி அணி​யும், செயின் பீட்ஸ் ஏஐ மேல்​நிலைப்​பள்ளி அணி​யும் மோதின. இதில் ஜிஎம்​டிடிவி மேல்​நிலைப்​பள்ளி அணி 4-1 என்ற கோல் கணக்​கில் வெற்றி பெற்று சாம்​பியன் பட்​டத்​தைக் கைப்​பற்​றியது.

SCROLL FOR NEXT