விளையாட்டு

காயம் அடைந்த ஷுப்மன் கில் குவாஹாட்டிக்கு பயணம்

செய்திப்பிரிவு

குவாஹாட்டி: தென் ஆப்​பிரிக்க அணிக்கு எதி​ராக கொல்​கத்தா ஈடன் கார்​டன் மைதானத்​தில் நடை​பெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்​டி​யில் இந்​திய அணி 124 ரன்​கள் இலக்கை அடைய முடி​யாமல் 30 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி அடைந்தது.

இந்த தோல்​வி​யால் இந்​திய அணி 2 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட தொடரில் 0-1 என பின்​தங்கி உள்​ளது. 2-வது மற்​றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 22ம் தேதி குவாஹாட்​டி​யில் தொடங்குகிறது. இதில் பங்​கேற்​ப​தற்​காக இந்​திய அணி​யினர் நேற்று கொல்​கத்​தா​வில் இருந்து விமானம் மூலம் புறப்​பட்டு குவாஹாட்டி வந்து சேர்ந்​தனர். இந்​திய அணி​யினருடன் முதல் டெஸ்ட் போட்​டி​யில் கழுத்து பகு​தி​யில் காயம் அடைந்த கேப்​டன் ஷுப்​மன் கில்​லும் குவாஹாட்டி வந்​தடைந்​தார்.

இன்​றும், நாளை​யும் இந்​திய அணி வீரர்​கள் குவாஹாட்டி மைதானத்​தில் தீவிர பயிற்​சி​யில் ஈடுபட உள்​ளனர். இந்த பயிற்சியின் போது ஷுப்​மன் கில் உடற்​தகு​தியை நிரூபிக்க முயற்சி செய்​யக்​கூடும். 26 வயதான கில், இன்​னும் 100 சதவீதம் உடற்​தகு​தியை எட்​ட​வில்​லை. அவரது கழுத்​தின் பின்​புறத்​தில் வலி இன்​னும் உள்​ளது. இருப்​பினும் அதன் தீவிரம் கணிச​மாகக் குறைந்​துள்​ள​தாக அணி வட்​டாரங்​கள் தெரி​வித்​துள்​ளன.

பிசிசிஐ செய​லா​ளர் தேவஜித் சைகியா வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில், “மருத்​து​வக்​குழு அளித்த சிகிச்​சைக்கு ஷுப்​மன் கில் நன்கு ஒத்​துழைத்​தார். அவர், சக அணி வீரர்​களு​டன் குவாஹாட்​டிக்கு சென்​றுள்​ளார். அங்கு தொடர்ந்து பிசிசிஐ கண்​காணிப்​பில் இருப்பார். ஷுப்​மன் கில் 2-வது டெஸ்ட்​டில் விளை​யாடு​வாரா என்பது சூழ்​நிலை​யைப் பொறுத்து தீர்​மானிக்​கப்​படும்” என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இதனால் ஷுப்​மன் கில் 2-வது டெஸ்​டில் விளை​யாடு​வா​ரா? என்பதில் சந்​தேகம் தொடர்ந்த வண்​ணம் உள்​ளது. மருத்​துவ ரீதியாக கில் உடற்​தகு​தியை எட்​டி​னாலும் 5 நாட்​கள் நடை​பெறும் டெஸ்ட் போட்​டி​யில், அவர் மீண்​டும் காயம் அடைந்​தால் வெகு​நாட்​கள் கிரிக்​கெட் விளை​யாட முடி​யாத நிலை உரு​வாகும். இதையும் பிசிசிஐ கவனத்​தில் எடுத்​துக்​கொள்​ளக்​கூடும்.

SCROLL FOR NEXT