விளையாட்டு

களத்தில் காயமடைந்த லுங்கி இங்கிடியின் உடல்நிலை சீராக உள்ளது: டெல்லி அணி தகவல்

வேட்டையன்

புதுடெல்லி: நடப்பு ஐபிஎல் சீசனில் சனிக்கிழமை பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் களத்தில் ஃபீல்ட் செய்த போது டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீரர் லுங்கி இங்கிடி காயமடைந்தார். இந்நிலையில், அவரது உடல்நிலை சீராக உள்ளதாக டெல்லி அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

டெல்​லி​யில் நடை​பெற்ற பஞ்​சாப் கிங்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணி​களிடையி​லான போட்​டி​யில் டெல்லி அணி ஃபீல்​டிங் செய்​து​கொண்​டிருந்​த​போது, பஞ்​சாப் வீரர் பிரி​யான்ஷ் அடித்த பந்தை பின்​புற​மாக ஓடிச் சென்று லுங்கி இங்கிடி பிடிக்க முயன்​றார். ஆனால் பந்​தைப் பிடிக்​காமல் நிலை​தடு​மாறி கீழே விழுந்​தார். இதில் அவர் தலை​யில் அடிபட்​டு மயக்கமடைந்தார்.

இதையடுத்து மருத்​து​வர்​கள் மைதானத்​துக்கு வந்து அவரைப் பரிசோ​தித்​தனர். இதைத் தொடர்ந்து மைதானத்​துக்குள் ஆம்புலன்ஸ் வரவழைக்​கப்​பட்டு அவர் கரோல் பாக்​கிலுள்ள மேக்ஸ் மருத்​து​வ​மனைக்​குக் கொண்டு செல்​லப்​பட்​டார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்​கப்​பட்டு வரு​கிறது. தற்போது அவர் நலமுடன் உள்ளார், விரைவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என டெல்லி அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

காயமடைந்த லுங்கி இங்கிடியை மைதானத்தில் இருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்ல தடையில்லாதா வழிப்பாதையான ‘கிரீன் காரிடர்’ வசதி ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் மூலம் வெகு சில நிமிடங்களில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT