விளையாட்டு

இந்தியா vs இலங்கை மகளிர் அணிகள் டி20-ல் இன்று மோதல்

செய்திப்பிரிவு

விசாகப்பட்டினம்: இலங்கை மகளிர் கிரிக்​கெட் அணி 5 ஆட்​டங்​கள் கொண்ட டி20 கிரிக்​கெட் தொடரில் விளை​யாடு​வதற்​காக இந்​தி​யா​வில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டுள்​து. இரு அணி​கள் இடையி​லான முதல் ஆட்​டம் விசாகப்​பட்​டினத்​தில் இன்று இரவு 7 மணிக்கு நடை​பெறுகிறது.

இந்​திய மகளிர் அணி ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்​பை​யில் சாம்​பியன் பட்​டம் வென்ற பிறகு பங்​கேற்​கும் முதல் தொடர் இது என்​ப​தால் ரசிகர்​கள் மத்​தி​யில் எதிர்​பார்ப்பு உள்​ளது.

மேலும் அடுத்த ஆண்டு நடை​பெற உள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்​கான இந்​திய அணியை கட்​டமைக்க உதவி​யாக​வும் தற்​போதைய இலங்கை தொடர் அமையக்​கூடும். இதனால் இளம் பேட்​ட​ரான தமிழகத்​தைச் சேர்ந்த ஜி.கமலினி, இடது கை சுழற்​பந்து வீச்​சாள​ரான வைஷ்ணவி சர்மா உள்​ளிடோருக்கு இந்​தத் தொடர் முக்​கி​யத்​து​வம் வாய்ந்​த​தாக அமைந்​துள்​ளது.

SCROLL FOR NEXT