விளையாட்டு

பார்வையற்றோர் டி20 கிரிக்கெட் - இந்திய மகளிர் அணி சாம்பியன்

செய்திப்பிரிவு

கொழும்பு: ​பார்​வையற்​றோர் சர்​வ​தேச டி20 கிரிக்​கெட் போட்டியில், இந்​திய மகளிர் அணி சாம்​பியன் பட்​டம் வென்​றது.

பார்​வையற்​றோர் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் போட்டி இலங்​கை​யில் நடை​பெற்​றது. இறு​திப் போட்​டி​யில் இந்​தி​யா- நேபாளம் அணி​கள் மோதின. இதில் இந்​திய அணி வெற்றி பெற்று சாம்​பியன் பட்​டம் வென்​றது.

இலங்கை தலைநகர் கொழும்​பிலுள்ள பி.​சாரா ஓவல் மைதானத்​தில் இப்​போட்​டி​யி​யின் இறுதி ஆட்​டம் நேற்று நடை​பெற்​றது. இதில் இந்​தி​யா, நேபாளம் அணி​கள் மோதின.

இறு​திப் போட்​டி​யில் முதலில் விளை​யாடிய நேபாள அணி 5 விக்​கெட் இழப்​புக்கு 114 ரன்​கள் எடுத்​தது. இதைத் தொடர்ந்து விளையாடிய இந்​திய மகளிர் அணி​யினர், 12 ஓவர்​களில் இலக்கை எட்டி 7 விக்​கெட் வித்​தி​யாசத்​தில் வெற்​றியைச் சுவைத்​தனர்.

SCROLL FOR NEXT