திருவனந்தபுரம்: இந்தியா, இலங்கை மகளிர் அணிகள் இன்று 5-வது மற்றும் கடைசி சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் மோதவுள்ளன.
இந்தப் போட்டி திருவனந்தபுரம் கிரீன்பீல்ட் சர்வதேச மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்கவுள்ளது. இந்தத் தொடரை இந்திய மகளிர் அணி ஏற்கெனவே வென்றுவிட்டது. இருப்பினும் தொடரை முழுமையாக கைப்பற்றுவதற்கு ஹர்மன் பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி முயற்சிக்கக்கூடும். அதே நேரத்தில் ஆறுதல் வெற்றியைப் பெறும் நோக்கில் இலங்கை மகளிர் அணி களமிறங்குகிறது.